அனைத்து வசதிகளும் உள்ள சிங்கப்பூரிலேயே டெங்கு பாதிப்பு உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி!!

 

அனைத்து வசதிகளும் உள்ள சிங்கப்பூரிலேயே டெங்கு பாதிப்பு உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி!!

அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு பாதிப்புகள் உள்ளன முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு பாதிப்புகள் உள்ளன முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி, “அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு பாதிப்புகள் உள்ளன. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. காய்ச்சல் வந்தவுடன் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்; காலம் தாழ்த்தி செல்ல வேண்டாம். வீடுகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என வலியுறுத்தி ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசின் முயற்சியால் மேகதாதுவில் அணைக்கட்டும் முடிவுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது. கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அனைத்து சாதியினருக்கும் உரிய சட்டப் பாதுகாப்புடன் இட ஒதுக்கீடு ஏற்கனவே அமலில் உள்ளது. 

EPS

தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் பதவியில் பொறுப்பேற்ற தமிழிசைக்கு வாழ்த்து கூறினேன். தமிழிசையை தெலங்கானா ஆளுநராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்குநேரி, விக்கிரவாண்டியில் மக்கள் செல்வாக்கோடு அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெறுவர்; இடைத்தேர்தல்களில் பணம் கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது” எனக் கூறினார்.