“அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை” : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

 

“அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை” : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!

கொரோனாவை விரட்ட எதிர்க்கட்சிகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கூட்டி கூட்டம் நடத்த வேண்டும் என முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

 தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று  கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

 

இதனிடையே இந்த அவசர காலகட்டத்தில் கொரோனாவை விரட்ட எதிர்க்கட்சிகளை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கூட்டி கூட்டம் நடத்த வேண்டும் என முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழக முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகளை கொண்டு கூட்டம் நடத்த இதில் ஒன்றும் கிடையாது.நோய்வாய்ப்பட்டவர்களை குணப்படுத்த உரியசிகிச்சை அளிக்க வேண்டும். நோய்தொற்று இருக்கிறதா என பார்க்க வேண்டும்.இதெல்லாம் மருத்துவம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள். இதில் அனைத்துகட்சி கூட்டம் கூட்டவோ அரசியல் செய்யவோ அவசியமில்லை. கொரோனா நோய்க்கு மருந்தே தனிமை தான். நம்மை நாமே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். தனிமையில் இருந்தால் இந்நோய் வராமல் தடுக்கலாம். தற்போது நிலை 2-க்கு வந்துள்ளது. இந்நிலையிலேயே நோய் பரவாமல் கட்டுப்படுத்திவிட்டால் எந்த பிரச்சினையும் எழாது. இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.