அனில் அம்பானி குறித்து உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தவறான பதிவு; இருவர் கைது!

 

அனில் அம்பானி குறித்து உச்ச நீதிமன்ற இணையதளத்தில் தவறான பதிவு; இருவர் கைது!

சொத்துகளை விற்க முடியாததால், ஸ்வீடன் நாட்டின் எரிக்சன் நிறுவனம் மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் மீது புகார் அளித்தது

புதுதில்லி: உச்ச நீதிமன்ற இணையதளத்தில் அனில் அம்பானி குறித்த தகவலை தவறாக பதிவிட்ட இருவர் தில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான  ரூ.46,000 கோடி அளவுக்குக் கடன் வைத்துள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சொத்துகளை விற்று கடனை அடைக்க ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால், சொத்துகளை விற்க முடியவில்லை. இந்த நிறுவனத்துக்கு 40 வங்கிகள், நிறுவனங்களிடத்தில் கடன் உள்ளன. ரூ. 25,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை விற்க முயன்றும் பல்வேறு காரணங்களால் விற்க முடியவில்லை.

anil ambani

இதுவரை சொத்துகளை விற்க முடியாததால், ஸ்வீடன் நாட்டின் எரிக்சன் நிறுவனம் மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் புகார் அளித்தது. மேலும், தங்களுக்கான ரூ.550 கோடி கடன் பாக்கியை திருப்பி கொடுக்க உத்தரவிடுமாறும் எரிக்சன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், எரிக்சன் நிறுவனத்திற்கு பணத்தை திருப்பி செலுத்தாத அனில் அம்பானி குற்றவாளி என அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. அத்துடன், எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.453 கோடியை 4 வாரத்தில் தர வேண்டும். ஒருவேளை பணத்தை கொடுக்க தவறும்பட்சத்தில் 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

supreme court

இதையடுத்து, தனது சகோதரர் முகேஷ் அம்பானியின் உதவியுடன் அந்த தொகையை காலக்கெடு முடிவடைவதற்கு முந்தைய நாள் எரிக்சன் நிறுவனத்திற்கு செலுத்தினார். முன்னதாக, வழக்கு விவரம் குறித்து உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவிட்ட மனவ் ஷர்மா மற்றும் தப்பன் குமார் ஆகிய இரு பதிவாளர்கள், இந்த வழக்கு விசாரணையின் போது, நேரில் ஆஜராக தேவையில்லை என தவறாக பதிவிட்டதாக தெரிகிறது.

தொடர்ந்து, அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை தில்லி குற்றவியல் போலீசாரிடம் ஒப்படைத்தது. இந்நிலையில், மனவ் ஷர்மா மற்றும் தப்பன் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் வாசிங்க

எட்டு வழிச்சாலை திட்டம் ரத்து; பாமக, விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி-அன்புமணி ராமதாஸ்!