அனாதை இல்லம் டூ கொல்லம் ஆட்சியர்! டன் கணக்கில் தன்னம்பிக்கை டானிக்!

 

அனாதை இல்லம் டூ கொல்லம் ஆட்சியர்! டன் கணக்கில் தன்னம்பிக்கை டானிக்!

வறுமை காரணமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு அப்போதைய சப் கலெக்டர், அப்துல் நாசர் படித்துவந்த பள்ளிக்கு வருகிறார். அப்போது தோன்றியது அந்தக் கனவு அப்துல் நாசருக்கு. அன்றைக்கு ஆரம்பித்தார், அப்துல் நாசர் ஐ.ஏ.எஸ். என்று தன் பெயரோடு கனவையும் சேர்த்து எழுதுவதற்கு.

கேரளா, கொல்லம் மாவட்ட ஆட்சியராக புதிதாக பதவியேற்றிருக்கும் அப்துல் நாசர் சற்று ஸ்பெஷலானவர். அவர் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? என்ன இருந்தாலும் நம்ம ரோஹிணி ஐ.ஏ.எஸ். அளவுக்கு வரமுடியுமா என்றால், நிச்சயம் அப்துல் நாசரின் வெற்றிப்பயணம் தனித்துவமானது. ஏழை பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாக பிறந்த அப்துல் நாசரின் ஐந்தாவது வயதில் தந்தை இறந்துவிட்டார். வறுமை காரணமாக ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு அப்போதைய சப் கலெக்டர், அப்துல் நாசர் படித்துவந்த பள்ளிக்கு வருகிறார். அப்போது தோன்றியது அந்தக் கனவு அப்துல் நாசருக்கு. அன்றைக்கு ஆரம்பித்தார், அப்துல் நாசர் ஐ.ஏ.எஸ். என்று தன் பெயரோடு கனவையும் சேர்த்து எழுதுவதற்கு.

Abdul Nasser IAS

கண்கள் மூடும் அனைவருக்கும்தான் கனவு வருகிறது. அதனை நிறைவேற்றும் வெறி, கண்ணை அகல திறந்து வைத்து உழைப்பவர்களுக்கு மட்டும்தானே கனவு கைகூடுகிறது. ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தார். வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலை. எனவே, ஹெல்த் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்கிறார். 1994ஆம் ஆண்டு துவங்கிய‌ துணை கலெக்டர் தேர்வுக்கான முயற்சி, 2006ல் கைகூடுகிறது. அடுத்த பதினோறாவது வருஷம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தரம் உயர்த்தப்படுகிறார். இப்போது கொல்லம் மாவட்டத்தின் கலெக்டராக பொறுபேற்றிருக்கிறார். பெரும் செல்வந்தர்கள் குடும்பத்தில் பிறந்து, லட்சக்கணக்கில் கோச்சிங்க் கிளாஸுக்கு செலவு செய்து வெற்றிபெறும் ஐ.ஏ.எஸ்களின் வெற்றிக்கு சற்றும் குறைவில்லாதது அப்துல் நாசரின் படிப்படியான வளர்ச்சி என்றால் ஒப்புக்கொள்வீர்கள்தானே?