அந்த 5 நாட்களில் கோவிலுக்கு போக சொல்லவில்லை: கேரள பெண்களிடம் கேள்வி எழுப்பும் சுப்ரமணியசுவாமி

 

அந்த 5 நாட்களில் கோவிலுக்கு போக சொல்லவில்லை: கேரள பெண்களிடம் கேள்வி எழுப்பும் சுப்ரமணியசுவாமி

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்பதைக்  கேரள பெண்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்லலாம் என்பதைக்  கேரள பெண்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்களுக்கு அனுமதியில்லை. நீண்ட காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த வழக்கத்தை எதிர்த்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. பாலினச்சமத்துவத்துக்கு எதிரானது எனக் கோரப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், ஏஎம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு மீதான விசாரணையை மேற்கொண்டு வந்தனர். அதன்படி  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

உச்சநீமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்தும் வரவேற்றும் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து கேரளா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாகப் பெண்களும் ஆண்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

 

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கேரள பெண்கள் ஏன் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நிற்கிறார்கள்? இந்தத் தீர்ப்பில்  “அந்த 5 நாட்களில்” அவர்களைக் கோவிலுக்கு செல்லத் தூண்டவில்லை. அது அவரவர் விருப்பம், கடவுள் என்ன நினைகிறார் என்பது யாருக்குத் தெரியும்’ என்று பதிவிட்டுள்ளார்.