அந்தமானில் பழங்குடியின மக்களால் சுற்றுலா பயணி கொலை – பரபரப்பு தகவல்கள்

 

அந்தமானில் பழங்குடியின மக்களால் சுற்றுலா பயணி கொலை – பரபரப்பு தகவல்கள்

அந்தமானில் பழங்குடியின மக்களால் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்ட் பிளேர்: அந்தமானில் பழங்குடியின மக்களால் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகத்தில் உள்ள மனிதர்கள் தொழில்நுட்பத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து நவநாகரீகமாக வாழ்ந்து வந்தாலும் உலகின் சில நாடுகளில் பழங்குடியின மக்கள் இன்னமும் இருந்து வருகிறார்கள். அவர்களை பொறுத்தவரை உலகம் நவநாகரீகத்தில் திளைத்தாலும் தங்களது நாகரீகத்தையே பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். உலகின் பிற மனிதர்களோடு தொடர்பற்ற அவர்கள், தங்களுடன் பிறரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் நினைப்பவர்கள். 

அந்தமான் உள்ளிட்ட சில நாடுகளில் பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் நம்மை போன்ற மனிதர்கள் அவர்களை காண வேண்டும் என்ற ஆவலில் அவர்கள் இடத்திற்கு சென்று அவர்களுக்கு தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை போன்ற மனிதர்களுக்கு தொல்லை கொடுக்காமல், கண்டுகொள்ளாமல் தங்களது வாழ்வை முழுமையாக வாழ்ந்து வருகிறார்கள்

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாப் பயணியான ஜான் ஆலன் அந்தமானுக்கு சுற்றுலா சென்றார். அவரை 7 மீனவர்கள், சென்டினல் இன பழங்குடி மக்கள் வசிக்கும் தீவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சென்டினல் தீவு என அழைக்கப்படும் அந்த தீவில், அமெரிக்க சுற்றுலாப் பயணியைக் கண்டதும், பழங்குடியின  மக்கள் வில் உள்ளிட்ட தங்களது ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஜான் ஆலன் உயிரிழந்தார். சுற்றுலாப் பயணியை செண்டினல் தீவுக்கு அழைத்துச் சென்ற 7 மீனவர்களையும் காவல் துறை கைது செய்துள்ளது.

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, சென்டினல் இன மக்களின் மக்கள் தொகை 40 என்று தெரிய வந்தது. மேலும் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.