அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவாம்… ரஜினியை கலாய்த்த திருமா! 

 

 அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பாவாம்… ரஜினியை கலாய்த்த திருமா! 

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்த ரஜினிகாந்த், “மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர் தற்போது இல்லை. வரும் தேர்தலில் நாம், ஆளுமைமிக்க தலைவரின் வாரிசு என்று நிரூபிக்க முயல்பவரை சந்திக்க வேண்டும்… ஆட்சி அதிகாரத்தில், முழு கஜானாவுடன் இருப்பவர்களை சந்திக்க வேண்டும்.

சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்த ரஜினிகாந்த், “மிகப்பெரிய ஆளுமைமிக்க தலைவர் தற்போது இல்லை. வரும் தேர்தலில் நாம், ஆளுமைமிக்க தலைவரின் வாரிசு என்று நிரூபிக்க முயல்பவரை சந்திக்க வேண்டும்… ஆட்சி அதிகாரத்தில், முழு கஜானாவுடன் இருப்பவர்களை சந்திக்க வேண்டும். ஆட்சியையும், குபேரன் கஜானாவையும் அதிமுக கையில் வைத்திருக்கிறது. அசுர பலத்தோடு உள்ள 2 அரசியல் ஜாம்பவான்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை உள்ளது. நாட்டுக்கு நல்லது செய்ய விரும்புவோர் மட்டுமே தமது கட்சிக்கு வர வேண்டும். முதலமைச்சர் பதவி வேண்டாம் என்பதில் நான் முன்பிருந்தே உறுதியாக இருந்தேன்.நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றால் என் ரசிகர்கள் கூட ஏற்கமாட்டார்கள். நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்று கூறியதை என் மாவட்டச் செயலாளர்கள் கூட ஏற்கவில்லை. என்னுடைய ஆசை எல்லாம், பேரறிஞர் அண்ணாவைப் போல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது தான். 

rajinikanth
நான் முதலமைச்சர் ஆகப்போவதில்லை என்பதை யாரும் தியாகம் செய்ததாக நினைக்கக் கூடாது. கட்சித் தலைவனாக இருந்து நல்ல மனிதரை முதலமைச்சராக உட்காரவைப்பேன். இளைஞர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு நான் பாலமாக இருப்பேன். அன்பு, பாசம், தன்மானம் கொண்ட ஒருவரை நாம் முதலமைச்சராக்குவோம். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதே என் நிலைப்பாடு; ஆட்சி தலைமை சரியாக இல்லை என்றால் கட்சி தலைமை தூக்கி எறியும். சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தைக் கழுவாமல் சர்க்கரைப் பொங்கல் வைப்பது போன்றதாகும்.

thirumavalavan

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், “ரஜினி பொது வாழ்க்கைக்கு வரப்போவதில்லை என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்ற கதையாக இருக்கிறது. சரிசெய்து விட்டு வருவது என்றால் எந்தக் காலத்திலும் வர முடியாது. அரசியலில் இறங்கித் தான் சீரமைக்க முடியும்.குட்டை நாறும் என மீன்கள் தரையில் வாழ்வதில்லை. எல்லாமும் சீரான பிறகு அரசியலுக்கு வருவேன் என ரஜினி சொல்வதில் நியாயமில்லை” என தெரிவித்தார்.