அத்திவரதரை இதுவரை தரிசித்தவர்கள் எண்ணிக்கை இத்தனை லட்சமா?

 

அத்திவரதரை இதுவரை தரிசித்தவர்கள் எண்ணிக்கை இத்தனை லட்சமா?

ஜூலை 23 ஆம் தேதி சயனகோலத்தில் உள்ள அத்தி  வரதரை  தரிசிக்கும் அவர், மறுநாள் நின்ற கோலத்தில் எழுந்தருளவுள்ள அத்திவரதரை தரிசனம் செய்கிறார்

அத்திவரதரை இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வழிபட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

athivaradhar

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி வெளியில் எடுக்கப்பட்ட இந்த அத்தி வரதரை லட்சக்கணக்கான  மக்கள் வழிபட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி அத்தி  வரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வருகிறார். வரும் ஜூலை 23 ஆம் தேதி சயனகோலத்தில் உள்ள அத்தி  வரதரை  தரிசிக்கும் அவர், மறுநாள் நின்ற கோலத்தில் எழுந்தருளவுள்ள அத்திவரதரை தரிசனம் செய்கிறார். 

athivaradhar

இந்நிலையில் அத்திவரதரை  தற்போது வரை 10 லட்சத்து 20 ஆயிரம் பேர் தரிசனம் செய்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கட்டுக்கடங்காத கூட்டத்தினால் அத்திவரதரை வழிபடுவதற்கான நேரம் காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.