அத்திவரதரைப் பார்க்கப் போறீங்களா… அவசரப்பட்டு ஆபத்துல சிக்காதீங்க…

 

அத்திவரதரைப் பார்க்கப் போறீங்களா… அவசரப்பட்டு ஆபத்துல சிக்காதீங்க…

நம் மக்களிடையே இருக்கும் அதீத ஆர்வம் தான் கொள்ளை கும்பலின் தூண்டிலில் மாட்டி வைக்கிற இரை. எத்தனை ‘சதுரங்க வேட்டை’ வெளியானாலும், மக்களிடையே இருக்கும் ஆசை மோகம் தீரப் போவதில்லை. ஏற்கெனவே சுகி சிவம், மக்களுக்கு நல்லதைச் சொல்கிறேன் பேர்வழி என்று அத்தி வரதர் பற்றி பேச ஆரம்பித்ததும் அவரையும் சூழ்ந்துக் கொண்டது கலாச்சார கும்பல்.
எந்த கடவுளும், சிரமப்பட்டு வந்து தரிசித்தால் தான் பலன் தருவேன்’ என்று சொல்வதில்லை. இதை எக்காலத்திலும் ஆன்மிக அன்பர்களும் உணரப்போவதில்லை.

அத்திவரதரைப் பார்க்கப் போறீங்களா… அவசரப்பட்டு ஆபத்துல சிக்காதீங்க…

நம் மக்களிடையே இருக்கும் அதீத ஆர்வம் தான் கொள்ளை கும்பலின் தூண்டிலில் மாட்டி வைக்கிற இரை. எத்தனை ‘சதுரங்க வேட்டை’ வெளியானாலும், மக்களிடையே இருக்கும் ஆசை மோகம் தீரப் போவதில்லை. ஏற்கெனவே சுகி சிவம், மக்களுக்கு நல்லதைச் சொல்கிறேன் பேர்வழி என்று அத்தி வரதர் பற்றி பேச ஆரம்பித்ததும் அவரையும் சூழ்ந்துக் கொண்டது கலாச்சார கும்பல்.

எந்த கடவுளும், சிரமப்பட்டு வந்து தரிசித்தால் தான் பலன் தருவேன்’ என்று சொல்வதில்லை. இதை எக்காலத்திலும் ஆன்மிக அன்பர்களும் உணரப்போவதில்லை. கோபப்பட்டு பொங்கி எழாமல்,

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஏழுமலை வெங்கடேசன் எழுதிய முகநூல் பதிவைப் படித்துப் பாருங்கள். 
எதைச் சாப்பிட்டால் பித்தம் தெளியும் என்கிற மனநிலையில் இருப்பவர்களுக்கு இதை விட எளிமையாக புரிய வைக்க முடியாது. அவருடைய முகநூல் பதிவு நம் வாசகர்களுக்காக அப்படியே…

“எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று எங்கள் ஊர் அறிஞர் அண்ணா சொன்னார் அல்லவா, அவரின் வீட்டருகே சில நூறு அடி தூரத்தில் எழுந்தருளியிருக்கும் அத்திவரதரை காண வேண்டுமானால் கண்டிப்பாக அத்தகைய இதயம் இப்போது இருந்தே தீர வேண்டும்!

மிகவும் வயதானவர்கள், உடல் நலமில்லாதவர்கள், மூச்சு திணறல் பிரச்சினை இருப்பவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக கையில் எக்கச்சக்கமாக பணமில்லாதவர்கள் தயவுசெய்து,  தயவுசெய்து,  தயவுசெய்து,  தயவுசெய்து எத்தனை தயவுசெய்து வேண்டுமானால் போட்டு கேட்டுக்கொள்கிறோம் காஞ்சிபுரத்திற்கு வருவதை தவிர்த்துவிடுங்கள்.

பிறந்து வளர்ந்து, ஊர் முழுக்க சொந்த பந்தங்களும் நண்பர்களும் கொண்ட நாங்களே ஒவ்வொரு விஷயத்திற்கும் தடுமாறுகிறோம். தெரிந்த ஓட்டல்களில் சாப்பிடவைக்க வேண்டும் என்றால் கூட முன்கூட்டியே சொல்லி வைத்து சீட்டை பிடிக்கச் சொல்ல வேண்டிய நிலைமை. 

நேற்று மதியம் ஒரு மணிக்குக்கு சாப்பாடு ரெடி. விருந்தினர்கள், பல நூறு கிலோ மீட்டரை சர்வ சாதாரணமாக கடந்து வந்து விட்டார்கள். ஆனால் ஊருக்குள் மூன்று கிலோ மீட்டர்  தூரம் கடக்க இரண்டரை மணிநேரம். பசியோடு அவர்கள் சோற்றில் கை வைக்கும் போது மணி மூன்றே முக்கால். இன்றைக்கு இருபெண்களுக்கு உதவ ஆட்டோவை அழைத்தால் இரண்டே கிலோ மீட்டர் தூரதிற்கு அதுவும் காலையில் போக்குவரத்து நெரிசலே இல்லாத நேரத்தில் ஓரு ஆட்டோக்காரன் நம்மிடமே 300 ரூபா கேட்கிறான். ஒரு கி.மீக்கு 150 ரூபாய். அடப்பாவிகளா.

நண்பரிடம் சொன்னால்,யோவ், நேத்து நைட் அஞ்சு கிலோ மீட்டருக்கு 800 ரூபா கேட்டிருக்கான். அதை குடுத்து டிராவல் பண்ணவும் நாலு கோஷ்டிகளுக்குள் போட்டியாம். இன்னாடா ரீசன்னு கேட்டா, தரிசனம் பார்த்து செத்து சுண்ணாம்பாயிருந்த வயசானவங்களோட பரிதாப நிலைமை அப்படி. 100 ரூபாய்க்கு மல்லி, முல்லை, கனகாம்பரம் என வாங்கி முப்பது முழம் கட்டி விருந்தினர்களிடம் கொடுத்த போது, அவர்கள் ஏற்கனவே வாங்கிய பூச்சர விலையின் அடிப்படையில் கணக்கு போட்டால் சர்வ சாதாரணமாக ஆயிரம் ரூபாயை தாண்டுகிறது. ஒரு முழ மல்லி 60, 70 ரூபாயாம்.

கோவில் பக்க தள்ளுவண்டியம்மா ஒரு முழு மாங்காயின் விலை 120 ரூபாய் என்று சொன்ன போது ஒரு தெலுங்கு குடும்பம் ஆடிப் போனதை இன்னும் நம்மால் மறக்க முடியவில்லை. இங்கேயே இப்டின்னா, தங்கும் விடுதிகள் மற்றும் உலகப் புகழ் பெற்ற டுபாக்கூர் பட்டுபுடவை கடைகளில்?

அத்தி வரதர் வைபவத்தை பொருத்தவரை வரப்போகிற பத்து நாட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளைமாக்ஸ் தான். ஒரு புறம் அதிகரிக்கப் போகிற கூட்டம், இன்னொரு பக்கம் பலவிதமான பகிரங்க கொள்ளக் கும்பல். திட்டமிடலோ வழிகாட்டுதலோ இல்லாமல் வந்து மாட்டிக் கொள்ளாதீர்கள்!”

@ஏழுமலை வெங்கடேசன்