அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோர் போன் பண்ணுங்க : உதயநிதி ட்வீட்!

 

அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோர் போன் பண்ணுங்க : உதயநிதி ட்வீட்!

தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  உருவான  கொரோனா வைரஸ் தற்போது  199  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இதுவரை உலகம் முழுவதும் 7  லட்சத்து 22 ஆயிரத்து 196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 33,976 பேர் பலியாகி  உள்ளனர் .  இதனால்  பல்வேறு நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.  பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோயில்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பூங்காக்களை  வரும்  ஏப்ரல் 14 ஆம் தேதி மூடவைக்கக்கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

ttn

தமிழகத்தை பொறுத்தவரையில் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.  அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க தமிழக அரசு உதவி வருகிறது. அதே சமயம் பல்வேறு கட்சியினரும்   களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். 

இந்நிலையில்  நடிகரும் திமுக இளைஞரணி  செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்  தனது டிவிட்டர் பக்கத்தில், கொரோனா பேரிடரால் மத்திய-மாநில அரசுகள் பிறபித்துள்ள ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில். அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் சிரமப்படுவோர் 93618 63559 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்… உங்களுக்கு உதவ தி.மு.க இளைஞர் அணி நிர்வாகிகள் தயாராக உள்ளனர்’ என்று பதிவிட்டுள்ளார்.