‘அதே ஸ்டைல்…அதே மாஸ்’ : 70வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

 

‘அதே ஸ்டைல்…அதே மாஸ்’ : 70வது பிறந்த நாளை கொண்டாடும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

1981 ஆம் ஆண்டு   லதாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள்  உள்ளனர். 

தமிழ் திரையுலகில் எப்போதும் ஒரே சூப்பர் ஸ்டார் தான். அது நம்ம தலைவர் ரஜினிகாந்த் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எளிமை, பண்பு, அடக்கம், அமைதி என மொத்த உயர்குணத்தையும் தனக்குள் வைத்துள்ள ஒரு மாபெரும் அத்தியாயம் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. 

ttn

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கர்நாடக மாநிலத்தில் ரானோஜிராவ் – ராமாபாய் இருவருக்கும்  1950 ஆம் ஆண்டு, டிசம்பர் 12 ஆம் தேதி  பிறந்தவர் சிவாஜி ராவ் என்ற ரஜினிகாந்த். மராத்திய குடும்பம் என்பதாலோ என்னவோ மன்னர் சிவாஜியின் பெயர் வைக்கப்பட்டது. ரஜினியின் தந்தை  ரானோஜி ராவ் காவலராகப் பணிபுரிந்தவர். இவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சி குப்பத்தில் பிறந்தவர். அவரது தாயோ, கோவையை சேர்ந்தவர். ரஜினிக்கு சத்யநாராயணா என்ற அண்ணன்  உள்ளார்.

ttn

சாதாரண பஸ்  கண்டக்டராக வாழ்க்கை தொடங்கிய இவருக்கு கோடம்பாக்கம் வருகை பெரும் மாற்றத்தை அளித்தது. வில்லன், குணசித்திர வேடம், ஹீரோ என முன்னேறிய ரஜினிக்கு ஏராளமான வெற்றிகளும், விருதுகளும் கிடைத்தன. 1981 ஆம் ஆண்டு   லதாவை திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என்ற இரு மகள்கள்  உள்ளனர். 

ttn

150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இன்னும்  தமிழ் சினிமாவின் மாபெரும் அத்தியாயமாகவே உள்ளார் ரஜினிகாந்த். எத்தனை உயரத்திற்குச் சென்றாலும் தொடக்கக் காலத்தை மறக்காத இந்த மாமனிதன், தற்போது அரசியலில் நுழைய அதிரடியாக முனைப்பு காட்டி வருகிறார்.

ttn

ஒரு கலைஞனாக திரைத்துறையில் வெற்றி பெற்ற ரஜினிகாந்த் என்ற காட்டாறு தற்போது அரசியல் என்ற சமுத்திரத்தில் கலக்க இருக்கிறது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே இலக்கை முன்வைத்து களமிறங்கவுள்ள நம்ம சூப்பர் ஸ்டாருக்கு சினிமாவை போல அரசியலிலும் வெற்றி கிட்ட வேண்டும் என்பதே நம் அனைவரது விருப்பமும். 

ttn

அந்த வகையில் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கட்டிப்போட்டுள்ள இந்த மன்னனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதில் பெருமை கொள்கிறது டாப் தமிழ் நியூஸ்.