“அது சாக்கடையா இல்ல பூக்கடையா? இப்படி திறந்து வைக்க”-சிறுவனுக்கு சவக்குழியாக மாறிய சாக்கடை  

“அது சாக்கடையா இல்ல பூக்கடையா? இப்படி திறந்து வைக்க”-சிறுவனுக்கு சவக்குழியாக மாறிய சாக்கடை  

சிறுவனின் தந்தை முகமது அன்வர் (36), சிறுவனை காணாததால் பல இடங்களில் 4 நாட்களாக தேடினார், எங்கும் சிறுவன் கிடைக்காததால் நகர் முழுவதும் போஸ்டர்கள் அடித்து குடும்பத்தினர் ஓட்டினார்கள். பிறகு போலிஸிலும் புகாரளித்தார்கள்.ஆனால் சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை   

மார்ச் 2 மதியம்  ஜஹாங்கிர்புரியின் ஜி தொகுதியில் உள்ள ஜுகி-ஜோப்டி கிளஸ்டருக்கு அருகில் திறந்து கிடந்த ஒரு  சாக்கடைக்கருகே  அஸ்ஹர் என்ற 3 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அந்த சிறுவன் அந்த சாக்கடையில் தவறி விழுந்தான் .

சிறுவனின் தந்தை முகமது அன்வர் (36), சிறுவனை காணாததால் பல இடங்களில் 4 நாட்களாக தேடினார், எங்கும் சிறுவன் கிடைக்காததால் நகர் முழுவதும் போஸ்டர்கள் அடித்து குடும்பத்தினர் ஓட்டினார்கள். பிறகு போலிஸிலும் புகாரளித்தார்கள்.ஆனால் சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை   

பிறகு அஸ்ஹரின் உடல் வெள்ளிக்கிழமை காலை கால்வாயில் மிதந்தது ,அவ்வழியே போன   சில உள்ளூர்வாசிகளால் அது கவனிக்கப்பட்டு ,அவனின் பெற்றோரிடம் கூறப்பட்டது . அவர்கள் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி ,அவரின் தந்தை அன்வர் கதறி அழுதார்.
இந்த சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க அதிகாரிகள் வடிகாலை மூட  வேண்டும் என்றும், நீதிமன்றத்தை அணுக அவர் விரும்புகிறார் என்றும் அன்வர் கூறினார். சிறுவனின் இழப்புக்கு ஈடுசெய்ய வேண்டும் என்றும் அன்வர் கூறினார்.