அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது!

 

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது!

கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக அதிமுகவின் தலைமை கழகம் அறிவித்ததோடு அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது. 

நாமக்கல்லின் திருச்செங்கோடு தொகுதியின்  அதிமுக எம்.பி.யாக கடந்த 1989ம் ஆண்டு தேர்வானார் கே.சி.பழனிசாமி.   இவர் காங்கேயம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் எம்பி  கே.சி.பழனிசாமி, கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக அதிமுகவின் தலைமை கழகம் அறிவித்ததோடு அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியது. 

ttn

இந்நிலையில் கே.சி.பழனிசாமி இன்று கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் தான் கட்சியில் நீடிப்பதாக கூறியதோடு பலரையும் ஏமாற்றி வந்ததாகவும், அதிமுக போலி இணையதளம் நடத்தி மோசடி செய்ததாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து  கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டில்  இன்று அதிகாலை அதிரடியாக நுழைந்த போலீசார் விசாரணை நடத்திய கையோடு  கே.சி.பழனிசாமியை கைது செய்தனர். தொடர் விசாரணைக்காக அவர் சூலூர் காவல் நிலையத்துக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.