அதிமுக பாமக-வுக்கு வைத்த 10 கண்டிசன்ஸ் உங்களுக்குத் தெரியும்..பாஜகவுக்கு அதிமுக வைத்த ஒரே ஒரு கண்டிசன் என்ன தெரியுமா!?

 

அதிமுக பாமக-வுக்கு வைத்த 10 கண்டிசன்ஸ் உங்களுக்குத் தெரியும்..பாஜகவுக்கு அதிமுக வைத்த ஒரே ஒரு கண்டிசன் என்ன தெரியுமா!?

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக அதிமுக-பாமக-பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு அதிமுக வைத்துள்ள ஒற்றை கண்டிஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக அதிமுக-பாமக-பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு அதிமுக வைத்துள்ள ஒற்றை கண்டிஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பியூஸ்கோயல் முதல்முறையாக வந்து பொள்ளாச்சி மகாலிங்கம் இல்லத்தில் அ.தி.மு.க-வுடன் முதல் ரவுண்ட் பேசியபோதே கூட்டணி உறுதியாகி விட்டது. ஆனால்,அவரிடம் அ.தி.மு.க சார்பாக வைக்கப்பட்ட ஒரு கண்டிசன்தான் பியூஸ்கோயலை அதிர்ச்சி அடைய செய்து விட்டதாம்.

பொதுவாக இரு கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு பற்றிப் பேசும்போது தொகுதிகளின் எண்ணிக்கை, யாருக்கு எந்தெந்த தொகுதி என்பது மட்டுமே பேசப்படும். ஒரு கட்சி, தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் யாரை வேண்டுமானாலும் நிறுத்தும். அந்த முடிவில் கூட்டணிக் கட்சி தலையிடாது. இதுதான் காலகாலமாக நடப்பது.ஆனால், இதை மீறி அ.தி.மு.க ஒரு நிபந்தனை விதித்தது.

hraja

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ஹெச்.ராஜாவுக்கு தமிழ்நாட்டில் சீட் கொடுக்கக்கூடாது என்பதுதான் அந்த நிபந்தனை! கலவரத்தை தூண்டும் விதமான அவருடைய பெரியார் பற்றிய பேச்சு, வைரமுத்து விவகாரம், பெண் ஊடகவியலார் குறித்த ஆபாசமான கருத்து, அறநிலையத்துறை ஊழியர்கள் குறித்து கீழ்த்தரமாக பேசியது, திரைத்துறையினருக்கு மதசாயம் பூசப்பட்டது, சாரணர் சங்கத்தேர்தலில் கேவலமாக தோற்றது ஆகியவற்றை பட்டியலிட்டுக் காட்டியதோடு, தமிழக காவல் நிலையங்களில் ஹெச்.ராஜா மீது சிறிதும் பெரிதுமாக 55 வழக்குகள் இருப்பதையும் சுட்டிக்காடி இருக்கிறார்கள்.

இதை கேட்டு ஆடிப்போன பியூஸ் கோயல் டெல்லி சென்று அமித்ஷா ,மோடி ஆகியோரிடம் சொல்லி அவர்களின் ஒப்புதலை பெற்ற பிறகுதான் சென்னை வந்து கூட்டணி அறிவிப்பில் கலந்து கொண்டு இருக்கிறார். இந்த தகவல் அறிந்ததால் தான் ஹெச்.ராஜா அன்றைய தினம் சென்னையில் இருந்து பெங்களூரு சென்று விட்டார்.

ஹெச்.ராஜாவுக்கு நடந்த இந்த அவமானத்தை தமிழிசை தரப்பு சொல்லிச் சொல்லி சிரிக்கிறதாம். அதனால் தான், எப்போதும் ஊருக்கு முன் கருத்து தெரிவிக்கும் ராஜா, கூட்டணி அறிவித்து இரண்டு நாள் மெளனம் காத்து மனதைத் தேற்றிக்கொண்டு இப்போது மீண்டும் ஒரு ஏடாகூட ட்வீட் செய்திருக்கிறார்.

நாற்பது தொகுதியிலும் மோடியே நிற்பதாக நினைத்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் செய்திருக்கும் ட்வீட், பா.ம.க தொண்டர்களை கடுப்பேற்றி இருப்பதால் அவர்கள் பொங்கிக் கொண்டு இருக்கிறார்கள்!