அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

 

அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது

மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் களம் சூடு பிடித்து வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை தொடங்கி விட்டன. அந்தவகையில், அதிமுக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, பாமக-வுக்கு 7 மக்களவை தொகுதி மற்றும் 1 மாநிலங்களவை தொகுதி வழங்கப்படும், 21 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வுக்கு பாமக முழு ஆதரவு அளிக்கும் என உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

அதிமுக-பாமக கூட்டணி என்பது மக்கள் நலனுக்கான கூட்டணி. இது ஒரு மெகா கூட்டணி, வெற்றிக் கூட்டணி என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அதிமுக-வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வரவிருந்தார். ஆனால், அவரது பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எனினும், கூட்டணி குறித்து பேச பாஜக அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தார். முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அதிமுக-வின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் சென்னை அடையாறு க்ரவுன் பிளாசா ஹோட்டலில் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மக்களவை தேர்தலில் பாஜவுக்கு 5 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது. எந்தெந்த தொகுதிகள் என பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.