அதிமுக ஆட்சியில் இன்னொரு தெர்மாகோல் அமைச்சர்…!  அப்பாடக்கர் விஞ்ஞானியின் அட்ராசிட்டி!

 

அதிமுக ஆட்சியில் இன்னொரு தெர்மாகோல் அமைச்சர்…!  அப்பாடக்கர் விஞ்ஞானியின் அட்ராசிட்டி!

அதிமுக அமைச்சர்களின் அட்ராசிட்டி நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. ஒரு புறம் இவர்களது அனுபவ அறிவு பொதுமக்களின் ஒவ்வொரு பிரச்சனைகளின் போதும் வெளிபட்டு மக்களின் மத்தியில் சிரிப்பாய் சிரிக்கிறது என்றால், இன்னொரு புறம் அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆளுமையையும், அமைச்சர்களை சுதந்திரமாக வாய் திறக்க விடாமல் செய்து வைத்திருந்ததின் காரணத்தையும் மக்கள் புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஏற்கெனவே தமிழகம் ஒரு தெர்மாகோல் அமைச்சரின் செயலைக் கண்டு வியந்த நிலையில், மக்கள் அதிகமாக படித்து விட்டதால் வேலை கிடைக்காமல் இருக்கிறது என்று தனது அதிமேதாவித்தனமான கண்டுபிடிப்பை இன்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளிப்படுத்தியிருக்கிறார். திண்டுக்கல் செட்டிநாயக்கன் பட்டியில் நடைபெற்ற முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வனத்துறை அமைச்சர் பேசுகையில், “ எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரிகள், மாவட்ட ஆட்சியரிடம் அப்போதெல்லாம் மகன், மகள் பெரிய படிப்பு 10 படித்துள்ளனர் என்று கூறுவார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் படிப்பு, கல்விஅறிவு அதிகமாகி விட்டது, இப்போது இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்னும் 1 லட்சம் இடம் காலியாக உள்ளது. அந்த அளவுக்கு மக்கள் படித்ததால் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் என் மகள் இன்ஜினியர், மகன் இன்ஜினியர் படிப்பு முடித்து உள்ளனர் என்று சொல்லி வருகின்றனர். உடனடியாக படித்த பிள்ளைகளுக்கு வேலை வேண்டும் என்றால் டி.என்.பி.எஸ்.சி தேர்வை படித்த பிள்ளைகள் எழுத தயாராக வேண்டும். அதில் தேர்வு எழுதி பாஸ் ஆகிவிட்டால் யாருடைய தயவும் தேவை இல்லை.

1 பைசா லஞ்சம் கொடுக்காமல் பெற்ற அறிவின் மூலம் வேலை உங்கள் வீடு தேடி வரும். போன காலங்களில் 30 வயது 40 வயது உடையவர்களுக்கு தவறாக ஓய்வூதியம் வாரி வழங்கி தரபட்டுள்ளது அதை சரி செய்து விசாரணை செய்து சரியாக இருந்தால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 60 வயது வந்தவர்கள் எங்களுக்கு உதவி தொகை தாருங்கள் என்று வருகின்றனர். சில இடங்களில் தவறாக 30 வயது 40 வயது உள்ளவர்களுக்கு போன காலங்களில் முதியோர் பென்சன் கொடுத்து விட்டார்கள். உண்மையான முதியவர்களுக்கு கொடுக்க முடியவில்லை.  ஒரு கிராமத்துக்கு சென்று விட்டால் 100 பேர் வந்து விடுகின்றனர். எனவே மாவட்ட வருவாய் துறையினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தனியாக வந்து விசாரணை செய்து சரியாக இருந்தால் ஓய்வூதியம் தரப்படுகிறது” என்று பேசினார்.