அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்… சாமி கும்பிட்டு சென்ற ஓபிஎஸ் 10 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல்!

 

அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்… சாமி கும்பிட்டு சென்ற ஓபிஎஸ் 10 ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல்!

அதிமுக அரசின் 5 ஆண்டுக்கான கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதன் ஓபிஎஸ்  10-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 

அதிமுக அரசின் 5 ஆண்டுக்கான கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதன் ஓபிஎஸ்  10-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். 

தமிழகத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் இந்தாண்டுடன்  அதிமுகவின் கடைசி பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெறவுள்ளது. இதை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம்  காலை  10 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார். இதனால் சட்டப்பேரவை வளாகத்திற்குள் வந்த அவர் பட்ஜெட் உரையை அங்குள்ள விநாயகர் கோயிலில் வைத்து சாமி தரிசனம் செய்தார். இந்த பட்ஜெட் மீதான உரை சுமார் 2 மணிநேரம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

tn

இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் ஏதும் இடம்பெறாது  என்றும்  இந்த பட்ஜெட்டில் வரவை விட செலவு  அதிகமாக இருக்கும் என்பதால் இது பற்றாக்குறை பட்ஜெட் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் கல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்க முடிவுசெய்துள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது. 

tt n

2011 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த அதிமுக  தொடர்ந்து 2016 ஆம் ஆண்டும் ஆட்சியை தக்கவைத்தது. இருப்பினும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கடந்த  2017-ஆம் ஆண்டு அதிமுக பிளவு பட்டிருந்ததால் அமைச்சர் ஜெயக்குமார்  பட்ஜெட் தாக்கல் செய்தார். இதுதவிர கடந்த 2011 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன் மூலம் ஓபிஎஸ்  10-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது  குறிப்பிடத்தக்கது.