‘அதிமுகவுடன் இணைய விருப்பம்’ – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் ஜெ.தீபா

 

‘அதிமுகவுடன் இணைய விருப்பம்’ – அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் ஜெ.தீபா

வரும் காலங்களில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார். 

சென்னை: வரும் காலங்களில் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார். 

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் தாய்கழகத்தில் வந்து இணையலாம் என்றும் சசிகலா குடும்பத்தை தவிர அனைவருக்கும் அதிமுகவில் உரிய இடம் வழங்கப்படும் என்றும் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் வெளிப்படையாகவே அழைப்பு விடுத்துள்ளனர்.

அமமுகவுடன் அதிமுக இணையும் என டிடிவி தினகரன் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுக நிர்வாகிகள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டனர். 

இதற்கிடையே, திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளில் அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் களப்பணிகளை தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை திருவாரூர் இடைத்தேர்தலில் நானோ என் கட்சி சார்பிலோ யாரும் போட்டியிடவில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அறிவித்திருந்தார். 

இந்நிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெ.தீபா, சசிகலா குடும்பத்தை கட்சியில் இணைக்க மாட்டோம் என்ற அதிமுகவின் முடிவை தான் வரவேற்பதாகவும், தங்களது அணி அதிமுகவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.