அதிமுகவினர்களை பார்த்துதான் வடிவேலு நடிப்பதை நிறுத்திவிட்டார்- டிடிவி தினகரன்

 

அதிமுகவினர்களை பார்த்துதான் வடிவேலு நடிப்பதை நிறுத்திவிட்டார்- டிடிவி தினகரன்

அமைச்சர்களின் ஜோக்கான பேச்சை கேட்டு வடிவேலு இப்போது நடிப்பதையே நிறுத்திவிட்டார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “கலைஞர், ஜெயலலிதாவிற்கு பிறகு தமிழகத்தில் ஒரு மிகப் பெரிய வெற்றிடம் இருந்து வருகிறது என்பது உண்மை. வெற்றிடத்தை நிரப்புவர் யார் என்று தேர்தலில் மக்கள் அடையாளம் காட்டுவார்கள். அதிமுக அரசு நாள், நட்சத்திரம் பார்த்து கொடுக்கும் தேதியில் தான் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். தேர்தல் முறைப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மு.க.ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தை அனுகியுள்ளார். தேர்தலை நிறுத்தும் எண்ணம் அவருக்கு இல்லை.

 

TTV Dhinakaran

அதிமுககாரர்கள் இம்சை அரசர்கள் மாதிரி. இவங்களின் மேதாவித்தனமான பேச்ச பார்த்து தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பதில்லை. யாரிடமோ சன்மானம் வாங்கிக் கொண்டு புகழேந்தி இவ்வாறு செயல்படுகிறார். ஆளும் கட்சிக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது. அதனால்தான் 2 மாதம் கழித்து கொடுக்க வேண்டிய பொங்கல் இலவசங்களை உடனே கொடுக்கின்றனர். சின்னம் வருமா, வராதா என்று தெரியாத நிலையிலும் கூட உள்ளாட்சி தேர்தலில் அமமுகவினர் சார்பில் போட்டியிட ஏராளமானோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் அவரை ஆதரிப்பதை குறித்து அப்போது முடிவு செய்வோம்” என தெரிவித்தார்.