அதிதீவிர புயலாக மாறிய ஆம்பன் புயல் – மக்கள் அச்சப்பட தேவையில்லை

 

அதிதீவிர புயலாக மாறிய ஆம்பன் புயல் – மக்கள் அச்சப்பட தேவையில்லை

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் ஆம்பன் புயல் தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை: தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் ஆம்பன் புயல் தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் ஆம்பன் புயல் தீவிரமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாநிலங்களான ஒடிசாவிலும், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 20-ஆம் தேதி ஆம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் பங்களாதேஷ் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

amphan

சென்னைக்கு கிழக்கே 650 கி.மீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டிருக்கிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆம்பன் புயல் குறித்து மக்கள் பயப்பட வேண்டாம் எனவும், நிலைமையை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.