அதிக வெய்யிலால் ஏற்படும் களைப்பை விரட்டி, புத்துணர்ச்சி தரும் பாரம்பரிய பானகம்!

 

அதிக வெய்யிலால் ஏற்படும் களைப்பை விரட்டி, புத்துணர்ச்சி தரும் பாரம்பரிய பானகம்!

 கிராமங்களில் திருவிழா நடக்கும் காலங்களில் ஒரு விசயம் கவனித்திருக்கிறீர்களா…வெய்யில் வரும் பக்தர்களுக்கு கிராமத்து மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அண்டாவில் வைத்து இந்த பானகம் கொடுப்பார்கள்.

கிராமங்களில் திருவிழா நடக்கும் காலங்களில் ஒரு விசயம் கவனித்திருக்கிறீர்களா…வெய்யில் வரும் பக்தர்களுக்கு கிராமத்து மக்கள் தங்கள் வீட்டு வாசலில் அண்டாவில் வைத்து இந்த பானகம் கொடுப்பார்கள்.
 
லேசான புளிப்பு, இனிப்பு,காரம் என்று கலந்துகட்டிய சுவையில் இருக்கும். இதை குடித்தவுடன் உடலுக்கு குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படுவதை உணரமுடியும். காலம் காலமாக நமது முன்னோர்கள் கோடை காலங்களில் இந்த பானகம் தயாரித்து குடிக்கும் வழக்கம் இருந்து வருகிறது.பாட்டிலில் குளிர் பானங்கள் வந்த பிறகும் இன்றும் கிராமங்களில் பயன் படுத்த தவறுவதில்லை.

panagam

கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின்கள், நிறைந்த எனர்ஜி பானகம் இது. நாம் அருந்தும் பானகத்தில் உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும்,இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள் பனைவெல்லத்திலிருந்தும் கிடைக்கும். ஏலக்காயிலிருந்து உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகளையும் செரிமானத்தை சரி செய்யும்.எலுமிச்சம்பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் வெப்பநிலையை சமன் படுத்தும்.

panagam

 
புளியிலிருக்கும் விட்டமின் C யானது பனை வெல்லத்துடன் சேரும்போது  அது,உடனடியா உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும்.கோடைகாலங்களில் வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு காஃபி,டீ கொடுப்பதற்கு பதிலாக இந்த பாரம்பரியமான பணக்கத்தைக் கொடுக்கலாம்.
 
பானகம் தயாரிக்க தேவையானவை 
 
புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
பனைவெல்லம் அல்லது வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
 
செய்முறை 
 

வெல்லத்தை தட்டி பொடியாக்கிக் கொள்ளுங்கள்.புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைத்து,அந்த புளி தண்ணீரில் வெல்லத்தை சேர்க்கவும்.வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும்.வெல்லம் முழுமையாக கரைந்தபின் இதை வடிகட்டிகொள்ளவும். இதனுடன் ஏலக்காய் பொடி,சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். பாரம்பரியமான பானகம் ரெடி!

panagam

 
ஒரு பத்து நிமிடம் மண் பானையில் ஊற்றி வைத்து பிறகு  குடித்தால் பேரானந்தமாக இருக்கும்.

இதையும் படிங்க: சுவையான உப்புமா கொழுக்கட்டை எப்படி செய்வது?