“அதிக லாபம்; கஸ்டமரே துணை” : இன்ஜினியர் படிச்சிட்டு பூக்கடை வைத்திருக்கும் இளைஞர்!

 

“அதிக லாபம்; கஸ்டமரே  துணை” : இன்ஜினியர் படிச்சிட்டு பூக்கடை வைத்திருக்கும் இளைஞர்!

படிப்புக்கேற்ற சம்பளம் இல்லை என்றும்  புலம்பி வரும் இன்றைய காலகட்டத்தில் குளித்தலை இளைஞர் ஒருவர் விதிவிலக்காக மாறியுள்ளார். 

லட்சக்கணக்கில் பணத்தை கொட்டி படித்த  இன்ஜினியர் படிப்புக்கு தகுதியான வேலை கிடைக்கவில்லை  என்றும் படிப்புக்கேற்ற சம்பளம் இல்லை என்றும்  புலம்பி வரும் இன்றைய காலகட்டத்தில் குளித்தலை இளைஞர் ஒருவர் விதிவிலக்காக மாறியுள்ளார். 

tt n

கரூர் குளித்தலை அருகே தாளியாம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக். பொறியியல் பட்டதாரியான இவர்  இன்ஜினியர் பூக்கடையை நடத்தி வருகிறார். படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் கிடைத்த வேலையை சந்தோஷமாக செய்யவேண்டும் என்பதற்கு ஏற்றாற்போல தனக்கு தெரிந்த பூக்கட்டும் பணியை வைத்து பூக்கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். 

ttn

தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்த இந்த பூக்கடையில் ஆரம்பத்தில் குறைந்த வருமானமே கிடைத்தாலும் தற்போது கைநிறைய பணம் பார்க்கும் அளவிற்கு பொறியியல் பட்டதாரி இளைஞர் கார்த்திக் முன்னேறியுள்ளார்.

ttn

அதுமட்டுமின்றி இன்னும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை  ஏற்படுத்தி தரும் அளவிற்கு  முன்னேறியுள்ளது மற்ற இளைஞர்கள் மத்தியிலும் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.