அதிக ஒலி எழுப்புவதிலும் முதலிடம் பிடித்த சென்னை ! அதிர்ச்சி தகவல் 

அதிக ஒலி எழுப்புவதிலும் முதலிடம் பிடித்த சென்னை ! அதிர்ச்சி தகவல் 

ஒவ்வொரு நாளும் பூமி அடையும் மாசுக்களைப் பார்க்கும் போது கூடிய விரைவில், பூமி வாழுவதற்கு தகுதியில்லாத இடமாக மாறிவிடும் போல. மனிதர்கள் தொடர்ந்து இயற்கைக்கு எதிரான செயல்களை செய்து வருகின்றனர். நிலம், தண்ணீர் ஆகியவை ஏற்கனவே தேவையான அளவு மாசடைந்து விட்டது. அடுத்து ஒலியையும் விட்டுவைக்கவில்லை. 

வளர்ந்த நாடுகளில், ஹாரனை தேவையில்லாமல் பயன்படுத்துவது குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் வாழும் மக்களுக்கு தங்கள் வாகனத்தின் ஹாரனை அடிக்க வில்லை என்றால் அன்றைய பயணம் நிறைவு பெறுவதில்லை. போக்குவரத்துக்கு நெரிசலில் தங்கள் இஷ்டத்துக்கு ஹார்னை அடித்து மற்றவர்களுக்கு நெஞ்சு வழி வரவைத்து விடுவார்கள். 

noise-pollution

இந்த மாதிரி ஒலி மாசுபாட்டை தடுக்க மும்பை காவல்துறை சிறப்பான முயற்ச்சியை கையாண்டுள்ளது. சிக்னலில் காத்திருக்கும் போது 85 டெசிபலுக்கு அதிகமாக சத்தம் எழுந்தால் மறுபடியும் 60 வினாடி நேரம் அதிகமாக காத்திருக்க வேண்டி வருமாறு தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளனர். இதனால் ஓரளவுக்கு ஒலி மாசு கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

‘மிண்ட்’ என்ற ஆங்கில நாளிதழ்  (13.02.2020) இந்தியாவின் முக்கிய நகரங்களின் ஒலி மாசு குறித்த கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்லி, மும்பை, சென்னை,, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு ஆகிய 6 முக்கிய நகரங்களில் எடுக்கப்பட்ட ஆய்வில், ஒலி மாசடைவதில் சென்னை தான் முதலில் உள்ளது என்ற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. 

குடியிருப்புப் பகுதிகளில், பகலில் 55 டெசிபல் அளவும், இரவில் 45 டெசிபல் அளவும் இருந்தால் சாதாரண அளவு என்றும், அதைவிட அதிகமாக சத்தம் எழுந்தால் ஒலி  மாசுப்பாடு  என்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒலி அளவை நிர்ணயித்துள்ளது. ஆனால் சென்னையில் பகலில் 67.8 டெசிபலும் இரவில் 64 டெசிபலும் ஒலி அளவாகப் பதிவாக இருப்பதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.