அதிகாலை என்பதால் யாரும் தடுத்து நிறுத்தவில்லை: சபரிமலை சென்ற பெண் பரபரப்பு பேட்டி!

 

அதிகாலை என்பதால் யாரும் தடுத்து நிறுத்தவில்லை: சபரிமலை சென்ற பெண் பரபரப்பு பேட்டி!

அதிகாலையில் எங்களைத் தடுத்து நிறுத்தி யாரும் போராட்டம் செய்யவில்லை என்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பிந்து தெரிவித்துள்ளார்.

கேரளா: அதிகாலையில் எங்களைத் தடுத்து நிறுத்தி யாரும் போராட்டம் செய்யவில்லை என்று சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த பிந்து தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 50 வயதுக்கும்  குறைவான பிந்து மற்றும் கனகதுர்கா என்ற இரு பெண்களும் சபரிமலை ஐயப்பன்  கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். பிந்து மற்றும் கனகதுர்கா கடந்த டிசம்பர் மாதம் கோயிலுக்குள் செல்ல முற்பட்டபோது தடுத்து நிறுத்தப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் இம்முறை  மாலை அணிந்து இருமுடி கட்டுடன் அதிகாலை 3.45 மணிக்கு 18படி ஏறாமல் கோவில் பின்புறம் வழியாகச்  சன்னிதானத்தை அடைந்த இவர்கள்  காவல்துறையினர்  பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்தனர். 

 

இந்நிலையில் இது குறித்து கூறியுள்ள பிந்து, ‘சாதாரண பெண் உடை அணிந்து தான் கோவிலுக்குச் சென்றோம். 18 படி  ஏறாமல் விஐபி செல்லும் பாதை வழியாக சன்னிதானத்தை அடைந்தோம். எங்களுக்குக் காவல்துறை முழு ஒத்துழைப்பு அளித்தது. அதிகாலை என்பதால்  எங்களைத் தடுத்து நிறுத்தி யாரும் போராட்டம் செய்யவில்லை’ என்று கூறியுள்ளார்.

பல்வேறு போராட்டங்கள், தடைகளைத் தாண்டி பெண்கள் இருவர் சாமி தரிசனம் செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரது வீட்டிற்கும் போலீசார் பாதுகாப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.