அதிகாலை ஆறுமணிக்கே சுடச்சுட இடியாப்பமும், சொக்கவைக்கும் பாயாவும் சாப்பிடனுமா…இராமலிங்கவிலாசுக்கு வாங்க!

 

அதிகாலை ஆறுமணிக்கே சுடச்சுட  இடியாப்பமும், சொக்கவைக்கும் பாயாவும் சாப்பிடனுமா…இராமலிங்கவிலாசுக்கு வாங்க!

வெறும் நிர்வாகம் மட்டுமல்ல,அன்று யாராவது ஒரு மாஸ்ட்டர் வரவில்லை என்றால்,அந்த ஐட்டத்தை தானே களமிறங்கி சமைத்துதரும் தொழில் நுட்பம் தெரிந்த நிர்வாகி! அதனால்தான் நாற்பது ஆண்டுகளாக அதே சுவையை மெய்ண்டெய்ன் செய்ய முடிகிறது.

சென்னை சூளையில் இருந்த பழைய போஸ்ட் ஆஃபீஸுக்கு அருகே இருக்கிறது இந்த இராமலிங்கவிலாஸ். இந்து மிலிட்டரி ஹோட்டல்.ஏ.கே.மெய்காப்ப தேவர் என்பவரால் துவங்கப்பட்டது.இப்போது அவர் மகன் நிர்வகிக்கிறார்.

வெறும் நிர்வாகம் மட்டுமல்ல,அன்று யாராவது ஒரு மாஸ்ட்டர் வரவில்லை என்றால்,அந்த ஐட்டத்தை தானே களமிறங்கி சமைத்துதரும் தொழில் நுட்பம் தெரிந்த நிர்வாகி! அதனால்தான் நாற்பது ஆண்டுகளாக அதே சுவையை மெய்ண்டெய்ன் செய்ய முடிகிறது.

ramalinga vilas

காலை 6 மணிக்கே ஹோட்டலை திறந்துவிடுகிறார்கள்.பொதுவாக எல்லா ஹோட்டல்களிலும் அதிகாலை உணவு என்றால்,இட்டிலி,தோசை,பொங்கல்,பூரி என்று இருக்கும்.அதற்கு சாம்பார்,சட்டினியில் நான்கைந்து வெரைட்டி என்று கொடுப்பார்கள்.இவர்களின் காலை உணவு பட்டியலே உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும்.

இடியாப்பம்,இட்லி,தோசை புரோட்டா இவையெல்லாம் அதிகாலையிலேயே தயாராகிவிடுகின்றன.இவற்றுக்கு பக்கவாத்தியமாக,கோழிக்குழம்பு,வறுத்த கறி,மட்டன் சாப்ஸ்,கால்குழம்பு (பாயா) அதில் பெப்பர் பாயா சுரீரென்று இருக்கிறது.

idiyappam paya

காரம் வேண்டாமென்றால்,இன்னொரு.சாதுவான பாயா இருக்கிறது.வறுத்த கறியும்,சாப்ஸும்கூட கொஞ்சம் ஸ்பைசிதான்.ஆனால் கோழிக்குழம்பு அத்தனை காரமில்லை…பழைமையான உணவகம்,மேஜை நாற்காலிகளும் அப்படியே,லுங்கியும்,வேட்டியும் கட்டியபடி பரிமாறும் உழியர்கள் என எழுபதுகளில் இருந்த சென்னை உணவகங்களின் மாதிரி வடிவமாக.இருக்கிறது இராமலிங்க விலாஸ்!

ramalinga vilas

நீங்கள் போய் அமர்ந்ததும்,பழைய பானியில் அப்போது என்ன தயாராக இருக்கிறது என்று சொல்வார்கள்.கொஞ்சம் ஆறி இருந்தாலும் பரவாயில்லை, இடியாப்பம் வாங்கிக் கொள்ளுங்கள்…உங்கள் நாக்கின் தாங்கு திறனுக்குப் பொருத்தமான ஒரு பாயாவை ஆர்டர் செய்து,உங்கள் இன்னிங்சை நிதானமாகத் துவங்கினால்,அந்த நாள் இனிய நாளாக அமையும்!

இது காலை நேர ஸ்பெஷல்! லஞ்ச் நேரம் நெருங்க நெருங்க பல புதுப்புது ஐட்டங்களும் அணிவகுக்கின்றன. போட்டி,காடை,முயல் என்று வரிசைகட்ட,மதிய உணவு உள்ளே ஏ.ஸி ஹாலில் பரிமாறப்படுகிறது.மட்டன் பிரியாணி,சிக்கன் பிரியாணி,காடைபிரியாணி என்று பிரியாணி ரகங்கள் இருந்தாலும்,ராமலிங்கவிலாஸ் சாப்பாடும் பிரபலம்தான்.

paya

மதிய உணவுக்கு இங்கே ஒரு சிறப்புக் குழம்பு தருகிறார்கள்.இப்போது சென்னையில் மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதுமே காணக் கிடைக்காமல் போய்விட்ட கருவாட்டுக்குழம்புதான் அந்த பிரபலத்துக்கு காரணம்.இங்கே தரப்படும் ‘போட்டி’ மற்றும்’ ரசம்’ இரண்டும் பாரம்பரிய சுவையுடன் இருக்கின்றன.

அதற்கு காரணம் இங்கே சமைக்கப்படும் உணவுவகைகளுக்கான மசாலாக்கள் இவர்களே சொந்தமாக அரைத்தெடுப்பதுதான்.ஆகவே வயிறுக்கு தொந்தரவில்லாத உணவுவகைகள்தான்…தைரியமாக சாப்பிடலாம்.

idiyappam paya

ஒரு முறை முயன்று பாருங்கள்.சென்னையில் இப்போதெல்லாம் நான் வெஜ் பிரேக்ஃபாஸ்ட் என்றால் முட்டையைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை! அதனால் இது போன்ற பாரம்பரிய உணவகங்களை நாம் ஆதரிக்க வேண்டும் .எப்பயாவது போவதென்று முடிவெடுத்துவிட்டால் முதல் நாள் இரவு அரை பட்டினி கிடந்து போய் சாப்பிடுங்கள்,அன்றைய தொடக்கமே அற்புதமாக இருக்கும்!