அதிகாரிகள் நேர்மையுடன் இருந்தால்தான் வரலாற்று உண்மைகள் தெரியும்! வழக்கறிஞர் கனிமொழி மதி பேச்சு !

அதிகாரிகள் நேர்மையுடன் இருந்தால்தான் வரலாற்று உண்மைகள் தெரியும்! வழக்கறிஞர் கனிமொழி மதி பேச்சு !

கீழடியில் கிடைத்த ஆய்வின் முடிவுகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது . 2015-ல் தொடங்கிய இந்த ஆய்வில், 4ம் கட்ட ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. பானைகள், செப்பேடுகள் என கிடைக்கும் பொருளுக்குப் பின்னால் பல ஆச்சர்யத் தகவல்கள் கிடைத்துள்ளன.

kizhadi

கீழடியில் ஆய்வுகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது, அதற்கெதிராக வழக்குத் தொடர்ந்து, பணிகள் மீண்டும் தொடங்க காரணமாக இருந்தவர் வழக்கறிஞர் கனிமொழி மதி. இது குறித்து வழக்கறிஞர் தெரிவிக்கையில் கீழடி ஆய்வில் நிறைய பொருள்கள் கிடைத்துள்ளன. மனித நாகரிகம் ஒரு இடத்தில் இருந்ததை உறுதி செய்வது பானை ஓடுகள்தான். பானை ஓடுகள் கிடைத்தாலே அந்த இடத்தில் ஆராய்ச்சியைத் தொடர வேண்டும்.
தொல்லியல் ஆராய்ச்சிகளில் பல ஆய்வு முடிவுகள் ஆவணப்படுத்தப்படவில்லை. தொல்லியல் துறை அதிகாரிகாரிகளுக்குத்தான் உண்மை தெரியும். அரசியல்வாதிகளைவிட இவர்களுக்குமே அதிகாரம் உண்டுதான். அதிகாரிகளிடம் நேர்மைத்தன்மை இருக்க வேண்டும் என கூறுகிறார் கனிமொழி மதி.
தொடர்ந்து பல இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளும்போதுதான் முழுமையான வரலாற்றுப் பின்புலத்தை அறிய முடியும். ஐந்தாவது கட்டம், ஆறாவது கட்டம் என்றெல்லாம் நிறுத்த முடியாது.
மனித இனம் வாழும் வரை ஆராய்ச்சிகளைத் தொடர வேண்டியதுதான். தமிழகத்திற்கு மட்டுமல்ல, மற்ற மொழி மற்றும் இனம் சார்ந்த வரலாறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகள் எல்லாம் இனக்குழு பற்றி அவர்களுடைய வரலாறைத் தேடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்.

kanimozhi

அதனால்தான், தொல்லியல்துறை என்ற ஒன்று இருக்கிறது. அந்தத் துறையின் வேலையே தொடர்ந்து ஆய்வுகளைச் செய்வதுதான். ஆய்வில் கிடைக்கும் தகவல்களை வைத்து வரலாறைத் தெரிந்துகொள்ளவேண்டியதுதான்” என்று ஆதங்கத்தோடு பேசினார் கனிமொழி மதி.