அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது: நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆவேசம்! 

 

அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது: நடிகர் ஜி.வி.பிரகாஷ் ஆவேசம்! 

நடிகர் ஜி.வி.பிரகாஷ்  சின்ன தம்பி யானைக்கு எதிராக அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது என்று பதிவு வெளியிட்டுள்ளார்

சென்னை: நடிகர் ஜி.வி.பிரகாஷ்  சின்ன தம்பி யானைக்கு எதிராக அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது என்று பதிவு வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்டத்திலுள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி என்ற காட்டுயானை சேதப்படுத்துவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து பெரிய போராட்டத்துக்குப் பிறகு சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

 சின்ன தம்பி யானை

இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு செல்லப்பட்டது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர். ஆனால் டாப்சிலிப் பகுதியில் விடப்பட்ட யானை சின்னதம்பி இரண்டு நாட்களுக்குள் மீண்டும் ஊருக்குள் புகுந்தது. கடந்த 3 நாட்களில் உணவின்றி 100 கிலோ மீட்டருக்கும் மேலாக சின்னதம்பி சுற்றியதால் களைப்படைந்த காட்டுயானை திருப்பூர் மடத்துக்குளம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதியில் மயங்கி விழுந்தது. சின்னதம்பி காட்டுயானை பிடிக்கப்பட்டு கும்கி யானையாக மாற்றப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோவையில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் சின்ன தம்பி யானைக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகப் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில்,”வாழும் உரிமை அந்த யானைக்கும் உள்ளது, தன் சகோதரனை பிரிந்த சோகத்தில் அலைந்து கொண்டிருக்கும் யானையை மேலும் துன்புறுத்துவது போல் அதை கும்கியாகுவோம் என்று அதிகாரிகள் எடுத்திருக்கும் முடிவு மிருகத்தனமானது, இரு யானைகளை மீண்டும் ஒன்று சேர்க்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.