அண்ணியுடன் ஏற்பட்ட தகாத உறவால் அண்ணனை போட்டு தள்ளிய தம்பி: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி?

 

அண்ணியுடன் ஏற்பட்ட தகாத உறவால் அண்ணனை போட்டு தள்ளிய  தம்பி: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி?

கணவர் கொல்லப்பட்ட வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு  மனைவியையும், அவரது கள்ளகாதலனையும் போலீசார் கைது செய்தனர். 

கடலூர் : கணவர் கொல்லப்பட்ட வழக்கில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு  மனைவியையும், அவரது கள்ளகாதலனையும் போலீசார் கைது செய்தனர். 

நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த கூழையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகதாஸுக்கும்  பரங்கிப்பேட்டை  சி.புதுக்குப்பத்தை சேர்ந்த சுமிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இதையடுத்து கடலூர் துறைமுகம் அருகே வசித்து வந்துள்ளனர். 

இதைத் தொடர்ந்து முருகதாஸ் சவுதி அரேபியாவிற்கு சென்று வேலைக்கு  சென்ற நிலையில் உறவினர் திருமணத்திற்காகக்  கடந்த 2013 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். ஆனால் சில தினங்களில் முருகதாஸ் திடீரென்று மாயமாகியுள்ளார் முருகதாஸைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர் மீண்டும் வெளிநாட்டிற்கே சென்றிருக்கலாம் என்று உறவினர்கள் நம்பியுள்ளனர். இதையடுத்து முருகதாஸின் மனைவி சுமிதாவும், முருகதாஸின் சகோதரர் சுமேரும் மாயமாகியுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முருகதாஸின் பாஸ்போர்ட்டை கண்டுபிடித்த அவரின் தாயாருக்கு சந்தேகம் வலுக்கவே அவர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து முதுநகர் போலீசார் தனிப்படை அமைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

murder

இந்நிலையில்   சுமிதாவும், சுமேரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு சென்ற தனிப்படை போலீசார் இருவரையும் பிடித்து கடந்த 2 ஆம் தேதி  அன்று கடலூருக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்தது. அதில் , முருகதாஸ் வெளிநாட்டிற்குச் சென்ற சமயத்தில் அவரது சகோதரர்  சுமேருகும் சுமிதாவுக்கும் இடையே கள்ளக்காதல்  ஏற்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு சொந்த அஊருக்கு வந்த முருகதாஸுக்கு இதுகுறித்து தெரியவர அவர் இருவரையும் கண்டித்துள்ளார். கள்ளக்காதலுக்கு அண்ணன்  தடையாக இருப்பான் என்று அவரை கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்ததோடு, வீட்டிற்கு  பின்புறம் குழிதோண்டிப் புதைத்துள்ளார்கள் என்பது வாக்குமூலத்தின் மூலம் உறுதியாகியுள்ளது. 

murder

முருகதாஸின் உடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் எலும்புகள்  எடுக்கப்பட்டன. அவற்றை ஆய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், முருகதாஸை கொன்ற மனைவி சுமிதாவையும், சகோதரர் சுமேரையும் கைது செய்து சிறையில் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.