அண்ணா விட்டு சென்ற கனியில் வண்டு! எம்.ஜி.ஆரை விமர்சித்த கருணாநிதி!! 

 

அண்ணா விட்டு சென்ற கனியில் வண்டு! எம்.ஜி.ஆரை விமர்சித்த கருணாநிதி!! 

பகுத்தறிவுப் பாதை எம்ஜிஆரை காந்தமாகக் கவர்ந்திழுக்கக் காரணமாய் அமைந்தவர் தமிழ்ச் சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்ற அரும்பாடு பட்ட அறிஞர் அண்ணா. அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

பகுத்தறிவுப் பாதை எம்ஜிஆரை காந்தமாகக் கவர்ந்திழுக்கக் காரணமாய் அமைந்தவர் தமிழ்ச் சமூகத்தை அறிவுசார் சமூகமாக மாற்ற அரும்பாடு பட்ட அறிஞர் அண்ணா. அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் அவர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

mgr

திமுகவில் முக்கியப் பேச்சாளராகவும், திரைப்படத் துறையில் கதை வசன கர்த்தாவாகவும் விளங்கிய எம்ஜிஆரின் உற்ற தோழனான கலைஞர் கருணாநிதிக்கு இதில் முக்கியப் பங்கு உண்டு. இருவரும் இணைந்து பணியாற்றிய படங்களை, திராவிடச் சிந்தனைகளை விதைப்பதற்கு பயன்படுத்தினர். அண்ணா கண்ட திமுகவில் இரட்டைக் குழல் துப்பாக்கி போல் தான் செயல்பட்டனர் கருணாநிதியும், எம்ஜிஆரும். கட்சியை வளர்க்க இருவரும் பம்பரம் போல் சுழன்று பணியாற்றினர். 

anna

திரைப்படத்தில் அண்ணாவின் படத்தையும் அவரது கொள்கைகளையும் பேசி வெற்றியும் கண்டவர் எம்ஜிஆர். முழுமையான அரசியல் படமான வெளிவந்த நம்நாடு திரைப்படம் அவரது துணிச்சலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இன்று கூட அத்தகைய துணிவு யாருக்கும் இல்லை. 

அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட நிலையில் ஆட்சி பொறுப்பேற்றார் எம்ஜிஆரின் ஆருயிர்த்தோழர் கருணாநிதி. அவர் முதலமைச்சராக தீவிர முயற்சி மேற்கொண்டவர்களில் எம்ஜிஆரும் ஒருவர் என்பதை வரலாறு அறியும். எம்ஜிஆர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்ததோடு கட்சிப் பணிகளிலும் தீவிரம் காட்டினார். அக்காலத்தில் எம்ஜிஆரின் செல்வாக்கு மக்கள் மத்தியில் எவ்வாறு இருந்தது என்பதை எங்கள் தங்கம் படத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சி உணர்த்தும்.

mgr

படிப்படியாக கட்சியில் வளர்ந்த எம்ஜிஆர் மற்றும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இடையே சில கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதனால் ஒதுக்கி வைக்கப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டார். திமுக தலைமையின் நடவடிக்கையால் உடைந்து போனார் எம்ஜிஆர். 20 ஆண்டு காலம் தான் உழைத்த கட்சியிலிருந்து தான் தூக்கியெறியப்பட்டதால் வேதனையின் உச்சத்திற்கே சென்றார். கருணாநிதி – எம்ஜிஆர் இடையிலான பிளவை சரிக்கட்ட முரசொலி மாறன் உள்ளிட்ட சிலர் இரவு பகலாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அந்த முயற்சி தோல்வியில்தான் முடிந்தது. ஒரே இரவில் திமுகவுக்கு வேண்டாதவராகிப் போனார் எம்ஜிஆர். அவர் வெளியேற்றப்பட்டால் திமுகவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்று கணித்தவர்களில் முரசொலி மாறனும் ஒருவர். அது உண்மை என்பதை அனைவரும் அறிவோம். 

kruna

“அண்ணா ஒப்படைத்துவிட்டுப் போன கனியில் வண்டு துளைத்துவிட்டது. வேறு வழியின்றி கனியை எறிய வேண்டியதாகிவிட்டது” என வழக்கம்போல் தனது பேச்சால் சாமர்த்தியம் காட்டினார் மு.கருணாநிதி. 

mgr

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் மனம் கலங்கிய எம் ஜி ஆர், மக்கள் செல்வாக்கை மூலதனமாகக் கொண்டு, தான் யாரால் ஈர்க்கப்பட்டு திமுகவுக்கு வந்தாரோ அவரின் பெயரை இணைத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவை, 1972ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதியன்று தொடங்கினார் எம்ஜிஆர்.