அண்ணா பல்கலைக்கழக 6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவன் கூட தேர்ச்சியில்லை!

அண்ணா பல்கலைக்கழக 6 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவன் கூட தேர்ச்சியில்லை!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6 தனியார் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 682 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 6 தனியார் பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 682 மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணாப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 514 பொறியியல் கல்லூரிகளில் 10 கல்லூரிகள் மட்டுமே 80 சதவிகிதத்திற்கும் மேல் தேர்ச்சி சதவிகிதம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 84 கல்லூரிகள் 50 முதல் 80 சதவிகிதம் வரையிலான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன. 118 கல்லூரிகள் 10 முதல் 20 சதவிகிதம் வரையிலான தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளன.  கடந்தாண்டுகளைவிட தேர்ச்சி சதவிகிதத்தின் நிலை பெருவாரியாக குறைந்திருப்பதற்கு அனுபவமில்லாத பயிற்சி பேராசியர்களை பணியமர்த்துவதே காரணம் என சொல்லப்படுகிறது. தேர்ச்சி சதவிகிதத்தின் குறைபாட்டை ஆய்வு செய்வதோடு, புதிய உக்திகளையும் கையாள்வதன் மூலம் பொறியியல் கல்வித் தரத்தை உயர்த்த முடியும் என்று கல்வி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர். 

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்ச்சி சதவிகிதக் குறைபாட்டால் தரம் குறைந்துவிட்டதாகக் கருதமுடியாது, அதே சமயம், ஒரு மாணவரைக் கூட தேர்ச்சி பெற முடியாத கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.