அண்ணாமலை ஐ.பி.எஸ். மட்டும் பெங்களூருல இருந்திருந்தா இப்புடி நடந்திருக்குமா?

அண்ணாமலை ஐ.பி.எஸ். மட்டும் பெங்களூருல இருந்திருந்தா இப்புடி நடந்திருக்குமா?

எங்களை யார்னு கேட்க நீ யார்னு (திரும்பவும் கன்னடத்துலதான்) அவனுங்க பதிலுக்கு சத்தம் போட, இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஆரம்பித்திருக்கிறது. பிறகு அந்த இருவரும் இடத்தை காலிசெய்துவிட்டு சென்றுவிட, திம்மண்ணாவும் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். அதன்பிறகு அரைமணி நேரம் கழித்து வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்க, என்ன ஏதென்று பார்க்க, திம்மண்ணா வெளியே வந்திருக்கிறார்.

பெங்களூரு, ஒயிட்ஃபீல்ட் போக்குவரத்துப் பிரிவில் காவலராக பணிபுரியும் திம்மண்ணா, இரவு பணிமுடிந்து 10:30 மணிவாக்கில் பணத்தூரில் இருக்கும் வீட்டிற்கு வருகிறார். அந்த அகால நேரத்தில் இரண்டு வாலிபர்கள் அவர் வீட்டிற்கு முன்னால் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அர்த்த ராத்திரியில் நம் வீட்டுக்கு முன்னால் வெளியாட்கள் யாராவது வந்து நின்றால், என்ன ஏது என்று கேட்போம் இல்லையா? அதுவே போலிஸ்காரர் என்பதால், சற்றே சத்தமாக யார்ரா நீங்கன்னு (கன்னடத்துலதாங்க) கேட்டிருக்கிறார்.

Mob attack

எங்களை யார்னு கேட்க நீ யார்னு (திரும்பவும் கன்னடத்துலதான்) அவனுங்க பதிலுக்கு சத்தம் போட, இருதரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஆரம்பித்திருக்கிறது. பிறகு அந்த இருவரும் இடத்தை காலிசெய்துவிட்டு சென்றுவிட, திம்மண்ணாவும் வீட்டிற்குள் சென்றிருக்கிறார். அதன்பிறகு அரைமணி நேரம் கழித்து வீட்டிற்கு வெளியே சத்தம் கேட்க, என்ன ஏதென்று பார்க்க, திம்மண்ணா வெளியே வந்திருக்கிறார்.

அங்கே ஒரு பத்து பேர், ஏற்கெனவே இருந்த 2 பேர் தங்கள் நண்பர்கள் 8 பேரை போய் அழைத்து வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் எடுத்த எடுப்பிலேயே திம்மண்ணாவை தாக்கி நிலைகுலைய வைத்ததில், அவர் மயக்கமாகி கீழே விழ, சத்தம்கேட்டு குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் கும்பலை விரட்டிவிட்டு திம்மண்ணாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். வெளியாட்களுக்குள் சண்டை என்றாலே பாய்ந்துவரும் காவல்துறை, தங்கள் சொந்த ஆளில் ஒருவரை அடித்த கும்பலை அள்ளிப்போட்டுக்கொண்டுப்போய் முறைவாசல் செய்து வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. நம்ம அண்ணாமலை ஐ.பி.எஸ். மட்டும் பெங்களூருல இந்நேரம் இருந்திருந்தா இப்புடி நடந்திருக்குமா?