‘அண்ணாத்த’ வுடன் குரூப் டான்ஸராக ராகவா லாரன்ஸ்: ரஜினியுடன் நடிக்க வேண்டும் என ஆசை!

 

‘அண்ணாத்த’ வுடன் குரூப் டான்ஸராக ராகவா லாரன்ஸ்:  ரஜினியுடன் நடிக்க வேண்டும் என ஆசை!

அதை அவரே பலமுறை பல மேடைகளில் கூறியுள்ளார்.அதனால் தான் ரஜினியை தனது குரு, தலைவர் என்று லாரன்ஸ் கூறிவருகிறார்.

தனது சினிமா வாழ்க்கையில் பலருக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களது வாழ்க்கையில் விளக்கேற்றியவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  அவரால் வாய்ப்பு பெற்று வளர்ந்தவர் தான் லாரன்ஸ். அதை அவரே பலமுறை பல மேடைகளில் கூறியுள்ளார்.அதனால் தான் ரஜினியை தனது குரு, தலைவர் என்று லாரன்ஸ் கூறிவருகிறார்.

tn

அதனால் தனது வளர்ச்சிக்குக் காரணமான சூப்பர் ஸ்டாரை என்றுமே லாரன்ஸ் மறப்பதில்லை. குறிப்பாக தனது ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றியின்போதும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெறுவது ராகவா லாரன்ஸின் வழக்கம்.

இந்நிலையில் லாரன்ஸ் தனது  டிவிட்டர் பக்கத்தில், குரூப் டான்சராக இருந்த போது  ரஜினியுடன் இருக்கும் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, வணக்கம் நண்பர்களே, ‘ நான் எங்கள் #அண்ணாத்த-உடன் குரூப் டான்சராக இருந்த போது என்று கூறி  நான் அவருடன் ஒரு சிறிய காட்சியில் நடிக்க விரும்புகிறேன் ‘ என்று தனது  விருப்பத்தையும் பதிவிட்டுள்ளார். 

 

முன்னதாக  இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ரஜினியின் 168 வது  திரைப்படத்திற்கு அண்ணாத்த என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரித்துவருகிறது.  இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறார்கள்.  டி.இமான் இசையமைத்து வரும்  இப்படத்தின் படப்பிடிப்பு  ஐதராபாத்தில் சமீபத்தில் துவங்கியது குறிப்பிடத்தக்கது.