அண்டா அண்டாவா செருப்பு அபிஷேகம் செய்யுங்க பாஸு… அதிமுகவினரை நக்கலடித்த ஆர்ஜே பாலாஜி

 

அண்டா அண்டாவா செருப்பு அபிஷேகம் செய்யுங்க பாஸு… அதிமுகவினரை நக்கலடித்த ஆர்ஜே பாலாஜி

ஆர்ஜேபாலாஜி நடித்துள்ள எல்கேஜி படத்தின் போஸ்டரால் அதிமுகவுக்குள் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது

சென்னை: ஆர்ஜேபாலாஜி நடித்துள்ள எல்கேஜி படத்தின் போஸ்டரால் அதிமுகவுக்குள் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.

aiadmk

ஆர்ஜே பாலாஜி – நடிகை பிரியா ஆனந்த் நடித்துள்ள படம் எல்.கே.ஜி.  தமிழகத்தின் இன்றைய அரசியலை மையமாக வைத்து நகைச்சுவையுடன் கிண்டல் செய்து உருவாகும் இந்தப் படத்தில் அதிமுக முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கத்தில் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.

admk

இந்நிலையில் ‘தரமான சம்பவம் 1’ என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி போஸ்டர் ஒன்றை வெளியிட்டார். இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் இருக்கிறது. இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி பிரவீன் குமார் என்பவர் தனது டுவிட்டரில் ‘எல்.கே.ஜி’ படம் ரிலீசானால் பாலாஜியின் கட் அவுட்டுக்கு செருப்பு அபிஷேகம் செய்யப் போவதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக ‘இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவாக செருப்பு அபிஷேகம் செய்யுங்கள்’ என்று நக்கலாக பாலாஜி பதில் அளித்தார். அரசியலில் புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ள இந்த சம்பவம் தற்போது சமுகத்தளங்களில் வைரலாகி வருகிறது.