அடேங்கப்பா கல்யாணத்துக்கு இப்படி கூட வரலாமா: வைரலாகும் வீடியோ!

 

அடேங்கப்பா கல்யாணத்துக்கு இப்படி கூட வரலாமா: வைரலாகும் வீடியோ!

மேற்கு வங்கத்தில் நடந்த திருமணத்திற்கு மணமகன் ரோட் ரோலரில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில் நடந்த திருமணத்திற்கு மணமகன் ரோட் ரோலரில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணங்கள் பொதுவாக அவரவர் வசதிக்கேற்ப நடைபெறும். சிலர் எளிமையாக நடத்துவார்கள் சிலரோ ஆகாயத்தில் திருமண விழாவை நடத்தி ஆச்சரியமூட்டுவார்கள். அதே மாதிரி பொதுவாக திருமணத்திற்கு மணமக்கள் காரிலோ அல்லது குதிரை வண்டியிலோ வருவது வழக்கம். 

இந்நிலையில்  மேற்கு வங்கத்தில்  அர்கா பட்ரா என்பவர் தன்னுடைய திருமணத்திற்கு ரோட் ரோலரில் வந்துள்ளார். நடியா மாவட்டத்தின் கிருஷ்ணாநகரை சேர்ந்த 30 வயதான மணமகன் அர்கா பட்ரா பாரம்பரிய உடை அணித்து மேளதாளங்களுடன் ரோட் ரோலரில் வந்தது திருமணத்திற்கு வந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  இது குறித்த  வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது