அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு!

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு!

லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

லட்சத்தீவு பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. அப்போதில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் பருவமழை வலுப்பெற்று சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதன் பின்னர், கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் அடிக்க ஆரம்பித்துள்ளது. அதன்பின் பனியுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. 

Rain

கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு எங்கேயும் மழை பதிவாகவில்லை எனக்கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்ப நிலையாக 30 டிகிரி செல்சியசஸ் ஆகவும், குறைந்த பட்ச வெப்ப நிலையாக 22 டிகிரி செல்சியசுஸ் ஆகவும்  பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்றும், தமிழ்நாட்டில் இயல்பை விட பருவமழை 2% கூடுதலாக பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.