அடுத்த மூன்று நாளைக்கு தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

அடுத்த  மூன்று நாளைக்கு தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்

தளபதி விஜய் நடிப்பில் ‘பிகில்’படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில் படத்தின் டீஸர் எப்போது வரும் என விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருந்த நேரத்தில்  அவரின் அடுத்த படம் குறித்து படக்குழு ஒரு பதிவுவை வெளியிட்டுள்ளது.

thalapathy 64

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் இந்த படம் வரும் அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என செய்திகள் வெளியாகின.அதை உறுதி படுத்தும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான XB பிலிம் கிரீடோர்ஸ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது.
அதில் ‘தளபதி 64’ படம் குறித்து அப்டேட் “அடுத்த மூன்று நாளும் தினமும் மாலை ஐந்து மணிக்கு அப்டேட் வரும் எனவும் முதல் அப்டேட் இன்று மாலை வெளியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச்  செய்தியைக்  கேட்டதிலிருந்து  தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சின் உச்சத்தில் உள்ளனர்.அடுத்த மூன்று நாளைக்கு இவர்களைக் கையிலேயே பிடிக்க முடியாது…ரெடி,ஸ்டார்ட்…