அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வட தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  24 மணிநேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். 

சென்னை: வட மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு அயற்சி காரணமாக  தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாகத்  திருவள்ளூரில் 22 செ.மீ, மழையும்  குறைந்த பட்சமாக மீனம்பாக்கத்தில்  9 செ.மீ என மழையும் பதிவாகியுள்ளது.

rain

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வட தமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த  24 மணிநேரத்தில் வட மற்றும் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். 
குறிப்பாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருவண்ணாமலை,  சேலம் ஆகிய மாவட்டங்களில் கன மழை மழைக்கு வாய்ப்புள்ளது. 

rain

சென்னையைப் பொறுத்தவரையில், விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் இதனால் தென் கிழக்கு  வங்கக்கடல் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் தற்போதைய நிலவரப்படி மழையானது இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குத் தொடரும்  என்றும் தெரிவித்துள்ளார்.