அடுத்த போட்டியிலும் ஸ்டைன் இல்லை; கவலையில் தென் ஆப்ரிக்கா ரசிகர்கள் !!

 

அடுத்த போட்டியிலும் ஸ்டைன் இல்லை; கவலையில் தென் ஆப்ரிக்கா ரசிகர்கள் !!

காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத டேல் ஸ்டைன் வங்கதேச அணியுடனான அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத டேல் ஸ்டைன் வங்கதேச அணியுடனான அடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இங்கிலாந்தில் கோலகலமாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்த தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, அடுத்ததாக வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளது.

வங்கதேசத்தை வீழ்த்தி தென் ஆப்ரிக்கா அணி தனது வெற்றி கணக்கை துவங்க வேண்டும் என தென் ஆப்ரிக்கா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அடுத்த போட்டியிலும் டேல் ஸ்டைன் விளையாட மாட்டார் என தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

ஐ.பி.எல் தொடரின் போது காயமடைந்த டேல் ஸ்டைன் காயத்தில் முழுமையகா குணமடையாத காரணத்தில் இங்கிலாந்து அணியுடனான முதல் போட்டியில் விளையாடவில்லை, அடுத்த போட்டியிலாவது ஸ்டைன் அணிக்கு திரும்பினால் தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை சமூக வலைதளங்கள் மூலமாக பார்க்க முடிகிறது.