அடுத்த ஆப்பரேஷன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பதுதான் – சு.சாமி

 

அடுத்த ஆப்பரேஷன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்பதுதான் – சு.சாமி

ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது எல்லாம் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு சிறிய பகுதிதான் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளையும் மீட்பதுதான் மத்திய பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் அக்கட்சித் தலைவர்கள் பேசிவருகிறார்கள்.

காஷ்மீரில் தற்போது வலுக்கட்டாயமாக ஏற்படுத்தி வைத்திருக்கும் அமைதியை, இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரின் அங்கீகாரம் என்பதாக அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆனால், காஷ்மீர் மக்களின் அபிமானத்தைப் பெற்று இதே அமைதி தொடருமானால் இதைவிட பாஜகவுக்கு பெரிய வெற்றி இருக்கமுடியாது. இதுக்கே அசந்துட்டா எப்புடி? காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து, ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டது எல்லாம் மிகப்பெரிய திட்டத்தின் ஒரு சிறிய பகுதிதான் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள இந்திய பகுதிகளையும் மீட்பதுதான் மத்திய பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என்றும் அக்கட்சித் தலைவர்கள் பேசிவருகிறார்கள்.
 

Pakistan occupied Kashmir

மாநிலங்களவையில் பேசிய பாஜகவின் சுப்பிரமணிய சாமி, “370 சட்டப்பிரிவை பயன்படுத்தித்தான் காஷ்மீரில் பண்டிட்கள் கொல்லப்பட்டனர், 5000க்கும் அதிகமான பண்டிட்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள், தற்போது அந்த சட்டம் நீக்கப்பட்டிருப்பதால், காஷ்மீரில் இதர இந்தியர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது. எங்களின் அடுத்த அஜெண்டா, பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் இந்திய பகுதிகளை மீட்பதாகத்தான் இருக்கும்” என்றிருக்கிறார். காஷ்மீர் மட்டுமல்ல, இமாச்சல், மணிப்பூர், நாகலாந்து மாநிலங்களில்கூட சிறப்பு அந்தஸ்து இன்னும் நடைமுறையில் இருக்கிறது. ஒருவேளை பாஜகவின் அடுத்த திட்டம் அம்மாநிலங்களாக இருக்கலாம்!