அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு! அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி

 

அடுத்த ஆண்டு முதல் பூரண மதுவிலக்கு! அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் தனியாரால் செயல்பட்டுவரும் 3 ஆயிரத்து 448 மதுபான கடைகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஆந்திர அரசு கொண்டுவந்துள்ளது. 

ஆந்திராவில் தனியாரால் செயல்பட்டுவரும் 3 ஆயிரத்து 448 மதுபான கடைகளை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் ஆந்திர அரசு கொண்டுவந்துள்ளது. 

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்புக்குப் பின் பல அதிரடி திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது . ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள்,  கூட்டுத் தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் இயங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதில் ஜெகன் மோகன் ரெட்டி கவனம் செலுத்திவருகிறார். 

tasmac

இந்நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியாகவும் அழித்திருந்தார். அதனை நிறைவேற்றும் பொருட்டு 4,380ஆக இருந்த மதுபான விற்பனை கடைகள் எண்ணிக்கையை 3,448ஆக ஆந்திர அரசு குறைத்தது. அதுமட்டுமின்றி அந்த கடைகள் முன்பு தனியார் வசம் இருந்தன. அதனை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். 

ஹைதரபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில துணை முதல்வர் கே. நாராயண சுவாமி,  மதுபான பயன்பாட்டை குறைத்து, முடிவில் மதுபான விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்படும். மதுபான கடைகளில் பணிபுரிய 3,500 சூப்பர் வைசர்களும், 8 ஆயிரத்து 33 விற்பனை பிரதிநிதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.