அடுத்த அப்டேட்டுக்கு தயாராகும் வாட்ஸ் அப் – என்ன புதுமை தெரியுமா ?

 

அடுத்த அப்டேட்டுக்கு தயாராகும் வாட்ஸ் அப் – என்ன புதுமை தெரியுமா ?

வாட்ஸ் அப் நிறுவனம், செயலியின் உள்ளேயே இயங்கும் புதிய பிரௌசர்  வசதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாட்ஸ் அப் நிறுவனம், செயலியின் உள்ளேயே இயங்கும் புதிய பிரௌசர்  வசதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகில் அதிக அளவிலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் அடிக்கடி வாடிக்கையாளர்கள் விரும்பும் படியாக செயலியை மேம்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அடுத்ததாக, செயலியினுள்ளேயே செயல்படும் புதிய பிரவுசர் சேவையை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி வரும் தகவலின் படி, வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வரும் லிங்க்குகளை திறக்கும் போது, அது கூகுள் குரோம் போன்ற வேறு இயங்கு தளங்களுக்கு  செல்லாமல், வாட்ஸ் அப்பின் சொந்த பிரவுசர் மூலம் செயலி உள்ளேயே திறக்கும் வகையில் மேம்படுத்த முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

whatsapp

இந்த புதிய அப்டேட் மூலம், லிங்குகளை  திறக்க மொபைல் எடுத்துக் கொள்ளும் நேரம் குறையும் என கூறப்படுகிறது. தற்போது, இந்த அப்டேட்டுக்கானபணிகள் நடைபெற்று வருவதால், வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இந்த சேவை கிடைக்காது என்றும்,விரைவில் தனி அப்டேட் மூலம் இது வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இன்-ஆப் பிரவுசர் அப்டேட், ஆண்ட்ராய்டு 4.1 அல்லது அதற்கு பிறகு வந்த இயங்குதளங்களில் மட்டுமே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பிரவுசர் மூலம் திறக்கப்படும் லிங்குகளை, ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாதாம்.ஆனால், அடுத்தடுத்து வரும் அப்டேட்கள் மூலம், இந்த குறையும் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.