அடுத்தவர் செய்த துரோகத்தால் குற்றவாளியாக நிற்கிறேன்! நடிகர் மோகன்பாபு ஆதங்கம்!?

 

அடுத்தவர் செய்த துரோகத்தால் குற்றவாளியாக நிற்கிறேன்! நடிகர் மோகன்பாபு ஆதங்கம்!?

மோகன்பாபு செக் மோசடி வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை: மோகன்பாபு செக் மோசடி வழக்கில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

பிரபல தெலுங்கு பட நடிகரும், தயாரிப்பாளருமான மோகன்பாபு ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தயாரிப்பில் தனது மகன் விஷ்ணு மஞ்சுவை வைத்து ‘சலீம்’ என்ற படத்தைத் தயாரித்திருந்தார். அப்படத்தை இயக்கிய சவுத்ரிக்கு 40 லட்சம் சம்பளம் பேசி அதற்கான காசோலை வழங்கி இருந்தார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பி வந்ததையடுத்து மோகன்பாபு மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் நடிகர் மோகன் பாபுவிற்கு 1 வருட சிறை தண்டனையும், 41 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியானது.

mohan babu

இந்நிலையில் இதுபற்றி மோகன் பாபு கூறுகையில், சலீம் படத்தை இயக்கிய சவுத்ரிக்கு 40 லட்சம் சம்பளம் பேசி இருந்தேன். சலீம் படத்தை மிகவும் நம்பி இருந்தேன். அதனால் மகனை வைத்து அடுத்த படத்தை இயக்க சவுத்திரிக்கு 40 லட்சம் ரூபாய் முன்பணத்தை காசோலையாக வழங்கி இருந்தேன். ஆனால் சலீம் படம் தோல்வி அடைந்துவிட அடுத்த படத்தை தயாரிக்கும் எண்ணத்தை நான் கைவிட்டுவிட்டேன்.

அதனால் முன்பணமாகக் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்த வேண்டாம் என்று கூறியிருந்தேன். ஆனால் அதையும் மீறி வங்கியில் செலுத்தி என்னை மாட்டி விட்டு இருக்கிறார். இது மிக பெரிய துரோகம் . இதை எதிர்த்து மேல்முறையீடு செய்து நிரபராதி என்று நிரூபிப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெய்பீம் என்று மேடைமேடைக்கு ஏமாற்றவில்லை: பா.ரஞ்சித்தை வறுத்தெடுக்கும் வன்னி அரசு