அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை மாலை அறிவிக்கப்படும்- ஹெச். ராஜா

 

அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை மாலை அறிவிக்கப்படும்- ஹெச். ராஜா

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சோலியை முடிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.  

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் தமிழ் இலக்கியவாதியும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய நெல்லை கண்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சோலியை முடிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.  அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து, பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். ஆனால் அவரை காவல்துறையினர் கைது செய்யாததால் ஹெச். ராஜா தலைமையிலான பாஜகவினர் நெல்லை கண்ணனுக்கு எதிராக மெரினாவில் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டத்தை நடத்தியதால் ஹெச். ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் கைதுக்கு பின் விடுவிக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன், “நெல்லை கண்ணன் மேடையில் பேசிய உடனேயே காவல்துறை அவரை கைது செய்திருக்க வேண்டும். பிரதமர் மோடியையும் உள்துறை அமைச்சர் அமைச்சரவையும் கொலை செய்ய வேண்டும் என்று பயங்கரவாதிகளுக்கு ஆணை இடுவது போல பேசி இருப்பது கண்டிக்கத்தது. ஏற்கனவே தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இந்துக்களின் மரணத்தில் நெல்லைக்கண்ணனுக்கு தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை செய்ய வேண்டும். 

pon radhakrishnan

குடியுரிமை திருத்த சட்டத்தால் எந்த மதத்தைச் சார்ந்தவரும் ஜாதியைச் சேர்ந்தவரும் பாதிக்கப்படப் போவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் வேறு பயங்கரவாத செயல்களுக்காக இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்பி விடுகின்றனர்” எனக்கூறினார். 

Hraja

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, “75 வயதாகி விட்டால் நாக்கு இவ்வளவு நீண்டு விடுமா!!! பிரதமரையும் உள் துறை அமைச்சரையும் சோலியை முடித்துவிட வேண்டும் என்று பேசி இருப்பது சரியா!!! தொலைக்காட்சி விவாதங்களில் என்னென்னமோ பேசுகிறீர்கள்.‌ நெல்லை கண்ணன் என்ற அயோக்கியனை கைது செய்ய வேண்டும் என்ற விவாதம் வையுங்கள். மேலும் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து நாளை அறிவிக்கப்படும்” எனக்கூறினார்.