அடிக்கடி வரும் ஏப்பத்தை எப்படி சரி செய்வது?

 

அடிக்கடி வரும் ஏப்பத்தை எப்படி சரி செய்வது?

இரைப்பையில் காற்றின் அழுத்தம் அதிகமாக அதிகமாக அதை வெளியேற்றப் பார்க்கும். தனக்குள்ள சிரமத்தை குறைக்க  உதவியைக் கேட்கும். அதுவும் சம்மதித்து கீழே இறங்கி இரைப்பையை பலமக அழுத்தும். இந்த அழுத்தத்தை ஈடுகட்ட இரைபைத் தசைகள் எல்லாமே ஒன்று கூடி

பொதுவாக எல்லோருமே சாப்பிடும் போது,  உணவுடன் சேர்த்து கொஞ்சம் காற்றையும் விழுங்கி விடுகிறோம். அதிலும் குறிப்பாக அவசர அவசரமாக உணவை உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் அதிகமாக காற்றையும் சேர்த்தே விழுங்குவார்கள். காற்றடைத்த குளிர்பானங்களை குடிக்கும் பொழுது, மது அருந்தும் போது, சூயிங்கம் மெல்லும்போது, புகை பிடிக்கும் போது, வெற்றிலை பாக்கு, புகையிலை பொருட்கள் உபயோகிக்கும் போது, காபி, தேநீர் குடிக்கும் பொழுது.. இவ்வளவு ஏன்… தண்ணீர் குடிக்கும் பொழுது கூட நம்மையும் அறியாமல் நாம் காற்றையும் சேர்த்தே விழுங்குகிறோம். அப்படி விழுங்கிய காற்று இரைப்பையில் இருந்து வெளியேற வேண்டும்.  சிலருக்கு இந்த காற்று விழுங்கல் அதிகமாக இருக்கும். இதற்கு ஏரோபேஜியா என்று பெயர்.

ஏப்பத்துக்கான காரணம் என்னவாக இருந்தாலும் விழுங்கிய காற்று இரைப்பையில் இருந்து வெளியேற வேண்டும் இல்லையா? இதற்காக  இயற்கை நமக்கு கொடுத்திருக்கும் தற்காப்பு வழிதான் ஏப்பம்.

haze

நாம் உணவுடன் விழுங்கிய காற்று மிகவும் கொஞ்சமாக இருந்தால், இரைப்பையில் செரிக்கப்பட்ட உணவுடன். கலந்து சிறுகுடலுக்கு சென்று விடும். இதன் அளவு அதிகமானால் இரைப்பைக்கு திண்டாட்டம் தான். இதனால் வயிறு உப்பிக் கொள்கிறது. உப்பசம் என்கிறோம். இரைப்பையில் காற்றின் அழுத்தம் அதிகமாக அதிகமாக அதை வெளியேற்றப் பார்க்கும். தனக்குள்ள சிரமத்தை குறைக்க  உதவியைக் கேட்கும். அதுவும் சம்மதித்து கீழே இறங்கி இரைப்பையை பலமக அழுத்தும். இந்த அழுத்தத்தை ஈடுகட்ட இரைபைத் தசைகள் எல்லாமே ஒன்று கூடி மேல் நோக்கி அழுத்தம் கொடுக்கும். இந்த அதீத அழுத்தத்தை தாங்க முடியாமல் உணவுக்குழாயின் கீழ் கதவும், மேல் கதவும் திறந்து கொள்ள இரைப்பை தன்னிடமுள்ள காற்றை ஒருவித சத்தத்துடன் வாய்வழியாக வெளியேற்றும். இதுதான் ஏப்பம்.

haze

இரைப்பையில் இருந்து மேல்நோக்கி காற்று அழுத்தமாக செல்லும்போது உணவுக்குழாயின் மேல் கதவையும் அது திறக்கவைக்கிறது. அப்போது மேல்கதவை ஒட்டி இருக்கிற குரல்வளையையும் தொண்டைச் சதைகளையும் இந்தக் காற்று அழுத்துவதால் குரல் வளை மேல் எழும்புகிறது. குரல் நாண்கள் சத்தம் இடுகின்றன. இந்தச் சத்தம்தான் ‘ஏவ்வ்வ்….’என்கிற ஏப்பச் சத்தம்.
ஒரு நாளில் ஒரிரு முறை ஏப்பம் வந்தால் பிரச்சனை இல்லை. அதுவே அடிக்கடி வருமானால் வயிற்றில் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். அது சாதாரண அஜீரணக் கோளாறாகவும் இருக்கலாம். இரைப்பை அல்சர், புற்றுநோய் போன்றவற்றின் ஆரம்பமாகவும் இருக்கலாம். கல்லீரல், பித்தப்பை, கணையக் கோளாறாகவும் இருக்கலாம். மருத்துவரிடம் பரிசோதித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

haze

அடிக்கடி வரும் ஏப்பத்தை தடுக்க என்ன வழி?
அவசர அவசரமாக சாப்பிடாதீர்கள். நன்றாக மென்று நிதானமாக சாப்பிடுங்கள். சாப்பிடும் போது பேசாதீர்கள். கோபம், கவலை போன்ற மனநிலைகளில் சாப்பிடாதீர்கள். வாயை மூடி உணவை மென்று விழுங்குங்கள். மென்றதை விழுங்கிய பிறகே அடுத்த கவளம் உள்ளே போக முடியும். காரம், மசாலா, உப்பு, கொழுப்பு, புளிப்பு, எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகளை முடிந்த அளவுக்கு குறைத்துக் கொள்ளுங்கள். ஆவியில் வேகவைத்த உணவுகளை அதிகப்படுத்தி கொள்ளுங்கள். சோடா போன்றவைகளை தவிர்த்து விடுங்கள்.