அடிக்கடி தலைவலியா? விரட்டியடிக்கும் ரகசியம் இதோ?*

அடிக்கடி தலைவலியா? விரட்டியடிக்கும் ரகசியம் இதோ?*

‘இந்த தலைவலியை மட்டும் தாங்கவே முடியவில்லை. காய்ச்சல் இருந்தால்  கூடப் பரவாயில்லை. ஏதாவது வேலையைப் பார்த்துக்கிட்டே சமாளிச்சுடலாம்’ என்று சொல்பவர்களா நீங்கள்?  தலைவலி உங்களுக்கு மட்டும் வருவதில்லை. இந்த உலகத்தில் தலைவலியால் அவதிபடுவோர்களின் எண்ணிக்கை பத்து பேருக்கு இருவர் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள். 

headache

தலைவலியை விட கொடுமையானது ஒற்றைத் தலைவலி. வாரத்திற்கு நான்கைந்து முறைகள் தலைக்காட்டி அட்டெண்டன்ஸ் போடும் ஒற்றை தலைவலி எல்லாம் உண்டு. பெரும்பாலும், ஒற்றைத் தலைவலிக்கு உடல் மற்றும் மனச்சோர்வு, திடீரென்று எடை கூடுதல், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவை தான் முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

சிலர் எப்பொழுதும் மருந்து,மாத்திரைகளை பாக்கெட்டில் வைத்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருப்பார்கள்.எப்பொழுது தலைவலி வந்தாலும் இன்னும் சிலருக்கு இரண்டு மாத்திரைகள் போட்டால் தான் சரியாகும். வேறு சிலரோ கடைகளில் விற்கும் கலர் கலரான தைல பாட்டில்களை வாங்கி எந்நேரமும் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். இவை எல்லாமே அதிக ஆபத்தானவை என்பதைப் புரிந்துக் கொண்டு ஒதுக்கி விடுங்கள். இதனால் வரும் பின்விளைவுகள் அதிகம். 

headache

நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவு முறைகளில் சில மாற்றங்களைக்  கொண்டு வந்தாலே ஒற்றைத்தலைவலியில் இருந்து முழுவதும் விடுபடலாம். 
இதற்கான அடிப்படையை உணவிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். முதலில் கொழுப்பு நிறைந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.  அதோடு கூட ஐஸ்கிரீம், கேக், சீஸ், மது வகைகளையும் முற்றிலும் விலக்க விட வேண்டும். அதற்கு பதில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், மொச்சை, பட்டாணி, பயறு வகைகள் ஆகியவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். 

fish

ஒமேகா 3 நிறைந்த உணவுகள் அதாவது மீன் மட்டும் உணவில் அதிகம் சேர்த்து வரலாம். அவித்த வேர்க்கடலையை.. (கவனிக்க வறுத்த கிடையாது) அவித்த வேர்கடலையை தினசரி 50கிராம் அளவு எடுத்துக் கொள்ளலாம். சுக்குக் காபியும், வெள்ளைப் பூண்டும் மூளை நரம்புகளை தளர்த்தி ஒற்றைத்தலைவலியிலிருந்து  நம்மை விடுவிக்கிறது. ஒரு மாதத்திற்காவது இந்த உணவுப் பழக்கத்தை கைக்கொள்ளுங்கள். தலைவலியை விரட்டியடித்து விட்டு ஆரோக்கியமாக இருப்போம்