அஞ்சு கறி சோறு அல்லது பெட்டி சோறு! கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?.

 

அஞ்சு கறி சோறு அல்லது பெட்டி சோறு! கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?.

ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் வாழும் இஸ்லாமியர் வீட்டு விசேடங்களின் போது செய்யப்படும் ஸ்பெஷல் விருந்து இது!சின்ன வெங்காயம், தேங்காய், பட்டை,கிராம்பு போன்ற மனமூட்டிகள் சேர்த்து நெய் சோற்றை தம் போட்டு தயாரிப்பார்கள்.அதுதான் கதாநாயகன் .அதற்குத் துணையாக ஒரு தால்ச்சா தரப்படும்,அதில் கத்தரிக்காயுடன் மட்டன் எலும்புகள்,கொழுப்பு ஆகியவை சேர்க்கப்படும்.

ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் வாழும் இஸ்லாமியர் வீட்டு விசேடங்களின் போது செய்யப்படும் ஸ்பெஷல் விருந்து இது!சின்ன வெங்காயம், தேங்காய், பட்டை,கிராம்பு போன்ற மனமூட்டிகள் சேர்த்து நெய் சோற்றை தம் போட்டு தயாரிப்பார்கள்.அதுதான் கதாநாயகன் .அதற்குத் துணையாக ஒரு தால்ச்சா தரப்படும்,அதில் கத்தரிக்காயுடன் மட்டன் எலும்புகள்,கொழுப்பு ஆகியவை சேர்க்கப்படும்.அடுத்தது புளிப்பச்சடி,மாம்பழத்துடன் பச்சை மிளகாய் சேர்த்த ஐட்டம் இது.அடுத்தது மட்டன் அல்லது சிக்கன் குழம்பு,கூடவே புளியானம் என்கிற ரசம்.கடைசியாக பிர்னி எனப்படும் ஒரு இனிப்பு டெஸர்ட்.

petti soru

இதெல்லாம் இப்போது இஸ்லாமியர் வீடுகளிலேயே அறிதாகிவிட்ட நிலையில் இன்றைய இளைய தலைமுறை இதை உணவகத்தில் தயாரித்து வழங்குகிறார்கள்.சென்னையில் வேளச்சேரி- சேலையூர் சாலையில் ராஜேஸ்வரி நகர் இருக்கிறது. அங்கே புதிதாகத் துவங்கப்பட்டு இருக்கும் பெட்டி சோறு என்கிற உணவகத்தில் நீங்கள் அஞ்சுகறி சோற்றை ருசிபார்க்கலாம்.

 சின்னஞ்சிறு இடம்,நின்றுகொண்டு தான் சாப்பிட வேண்டும்.உள்ளே பத்துப்பேர் சாப்பிடும்போது,வெளியே பத்துப்பேர் வெயிட்டிங்கில் இருக்கிறார்கள். பகல் 12.30 முதல் பிற்பகல் 3.30 வரை உணவகம் இயங்குகிறது.
அங்கே சாப்பிடுபவர்களை விட பார்சல் வாங்கிப் போகிறவர்கள்தான் அதிகம்.அந்தப் பார்சல் செய்யும் விதத்தைத்தான் கடைக்கு பெயராக்கி இருக்கிறார்கள்.

petti soru

மொத்தம் மூன்று காம்போக்கள் உண்டு.மட்டன் 160 ரூபாய்,சிக்கன் 130 ரூபாய்,சைவம் 80 ரூபாய்.பார்சல் கட்டணம் தனியாக ஐம்பது ரூபாய்.
அவர்கள் பார்சல் செய்யும் அழகுக்கு தாராளமாக ஐம்பது ரூபாய் தரலாம்
முதலில் ஒரு ஓலைப் பெட்டியில் சோற்றைப் போடுகிறார்கள்.அதற்குள் ஒரு சுட்ட,மண்ணால் ஆன கூஜாவை செருகி வைத்து அதில்,சிக்கன் அல்லது மட்டன் அல்லது சைவ கிரேவியை ஊற்றி அதை பாக்கு மட்டை தொன்னை கொண்டு மூடி அதில் தால்ச்சா வைத்து அதை ஒரு இலையால் மூடுகிறார்கள்

petti soru

மறுபடி ஒரு தொன்னை அதில் பச்சடி அதன் பிறகு ஓலைப் பெட்டியின் மூடியைப் போட்டு மூடி,ரப்பர் பேண்ட் போட்டு தருகிறார்கள்.
பிர்னியும்,புளியானமும் மட்டும் மிஸ்ஸிங்.அடுத்த முறை அந்தப்பக்கம் போகும்போது முயற்சித்துப் பாருங்கள்.