அஜித் ரசிகர்களே இன்னிக்கு 6 மணிக்குத் தயாரா இருங்கப்பா… 

 

அஜித் ரசிகர்களே  இன்னிக்கு 6 மணிக்குத் தயாரா இருங்கப்பா… 

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

சென்னை: தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தல அஜித் தற்போது பாலிவுட்டில் வெளியாகி ஹிட் அடித்த பிங்க் பட ரீமேக்கில் நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை என்று பெயரிட்டுள்ள இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அதில் தல அஜித் வழக்கறிஞராக நடிக்க அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார். 

மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரித்துள்ளார்.

ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை எதிர்பார்த்து தல ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். மேலும் படத்தின் அப்டேட் விடுமாறு ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் ரசிகர்களின் கோரிக்கை ஏற்ப படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பை போனி கபூர் வெளியிட்டுள்ளார். 

ஆம்… இந்த படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6மணிக்கு வெளியாகும் என்று ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த தல ரசிகர்கள் ‘கண்டிப்பாக படத்தின் பாரஸ்ட் லுக் போல ட்ரைலர்யும் பட்டய கிளப்பும்’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.