அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலத்தை கலாய்த்த விஜய் ரசிகர்: கடைசியில் நடந்தது என்னமோ இதுதான்?!

 

அஜித்துக்கு வாழ்த்து கூறிய பிரபலத்தை கலாய்த்த விஜய் ரசிகர்: கடைசியில் நடந்தது என்னமோ இதுதான்?!

அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சேரனை விஜய் ரசிகர் ஒருவர் வம்பிழுத்துள்ளார். 

சென்னை: அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் சேரனை விஜய் ரசிகர் ஒருவர் வம்பிழுத்துள்ளார். 

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்  வருபவர் அஜித். தனது கடுமையான முயற்சியால் திரைத்துறையில் தனக்கென்று தனி  இடத்தை பிடித்து ரசிகர்களால் அன்போடு ‘தல’ என்று அழைக்கப்பட்டு வருகிறார்.  இந்நிலையில்  நடிகர் அஜித் குமார் தனது 48 வது  பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு கோலிவுட் முதல் பாலிவுட் வரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். இது ஒருபுறமிருக்க அஜித்தின் ரசிகர்களோ ரத்த தான முகாம், அன்னதானம் உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகளை  செய்து அசத்தினர்.

 

இந்நிலையில் நடிகரும் இயக்குநருமான  சேரன் அஜித்துக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘எந்தவித பின்னனியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து இன்று தனக்கென ஒரு நிலையான இடத்தை தன் உழைப்பால் பெற்றிருக்கும் நல்ல மனம் கொண்டவரான அஜித் அவர்களுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

 

இதை கண்டு கடுப்பான விஜய் ரசிகர் ஒருவர், கிண்டலாக  அப்படியா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதை கண்ட சேரன் அந்த ரசிகருக்கு அளித்த பதிலில், ‘விஜய் சார் பிறந்தநாளுக்கும் வாழ்த்து சொல்வேன்… கவலை வேண்டாம் சகோதரா’ என்று கூறினார்.  இதை கண்ட அஜித் ரசிகர்களோ, செருப்படி பதில் என்று  சேரனை பாராட்டி வருகின்றனர்.