அஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி

 

அஜித்தின் ஆஸ்தான இயக்குநருடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில்  தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் அடுத்து நடிக்கும் படத்தை இயக்கும் இயக்குநர்கள் பற்றிய தகவல்கள் உலா வரும் நிலை தொடங்கியுள்ளது.  அதில் ஏற்கனவே ரஜினியை வைத்து படம் இயக்கிய பா. ரஞ்சித், கே.எஸ். ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரது பெயர்கள் அதிகளவில் அப்பட்டியலில் இடம் பெற்றது.

இந்த நிலையில், ரஜினியின் அடுத்த இயக்குநர் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிறுத்தை சிவா என்று தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலை முன்னிட்டு ரஜினியின் பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசமும் வெளியாகி இரண்டுமே வெற்றி பெற்றது. விஸ்வாசம் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலையும், படத்தின் குடும்ப சென்டிமென்டையும் பெரிதும் ரசித்த ரஜினி, சிவாவுடன் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

 சூர்யாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்த சிவா, ரஜினியின் அழைப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் ரஜினிகாந்த்தின் படத்திற்குப் பின் சூர்யாவின் படத்தை இயக்கவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.