அசுரன் படத்தில்இணைந்த பிரபல இயக்குநர்!

 

அசுரன் படத்தில்இணைந்த பிரபல இயக்குநர்!

அசுரன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநரான பாலாஜி சக்திவேல் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

சென்னை: அசுரன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல இயக்குநரான பாலாஜி சக்திவேல் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘வடசென்னை’, ‘மாரி 2’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துவருகிறார். மேலும் நடிகர் கருணாஸின் மகன் சிறிய வயது தனுஷ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

balaji sakthivel

இந்நிலையில், இப்படத்தில் காதல்,கல்லூரி,வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடத்துவருவதாக கூறப்பட்டுள்ளது.